17 Dec 2020

சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளித்து கட்டாய தகனத்தை நிறுத்துக வலியுறுத்தி மட்டக்களப்பில் பதாதை கவன ஈர்ப்பு முன்னெடுப்பு.

SHARE

சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளித்து கட்டாய தகனத்தை நிறுத்துக வலியுறுத்தி மட்டக்களப்பில்  பதாதை கவன ஈர்ப்பு முன்னெடுப்பு.

“இலங்கை அரசே சிறுபான்மையினரின் மத உரிமைக்கு மதிப்பளித்து கட்டாய தகனத்தை நிறுத்துக” எனும் தொனிப் பொருளிலமைந்த பதாதை காட்சிப்படுத்தல் கவன ஈர்ப்பு முன்னெடுப்பு புதன்கிழமை 16.12.2020 மட்டக்களப்பில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு காந்திப் பூங்காவிலும் மட்டக்களப்பு பிரதான பஸ்நிலைய வளாகத்திலும் இடம்பெற்ற இந்த பதாதை காட்சிப்படுத்தல் நிகழ்வில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

அங்கு கருத்துத் தெரிவித்த எழுத்தாளரும் பல்துறைக் கலைஞரும் சர்வமத அமைப்பின் செயற்பாட்டாளருமான ஏ.சி. அப்துல் றஹ{மான் இந்த நாட்டில் காலத்துக்குக் காலம் சிறுபான்மை இனங்கள் அச்சுறுத்தலுக்கும் ஆக்கிரமிப்புக்கும் மனித உரிமை மீறல்களுககும் உட்படுத்தப்பட்டே வந்துள்ளார்கள்.

அதேவேளை எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல் இப்பொழுது கொரோனா வைரஸ் தொற்றைக் காரணம்; காட்டி முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவதென்பது அதி உச்ச மனித உரிமை மீறலாகவும் மத உணர்வுகளைப் புண்படுத்தும் மாபெரிய கொடுஞ்செயலாகவும் கருதப்படுகின்றது.

அயல்நாடுகளிடம் சடலங்களை அடக்கம் செய்யக் கேட்குமளவுக்கு இப்படியானதொரு அராஜகம் இந்த நாட்டில் தலைவிரித்தாடுகிறது.

இது ஒரு வரலாற்றுக் கொடுமையாகும்.

எனவே அதற்கு எதிராகவே இப்படிப்பட்ட கவன ஈர்ப்புக்கள் நாடு முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை இனங்கள் சகல உரிமைகளுடனும் மத உரிமைகளை மதிக்கக் கூடிய வகையிலும் வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் அப்பொழுதுதான் அமைதியும் அபிவிருத்தியும் இந்நாட்டில் நிலைத்து நிற்கும்” என்றார்.

இதில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் கே. முத்துலிங்கம்  அந்நிறுவனத்தின் நிருவாக உத்தியோகத்தர் இந்திரன் ஜெயசீலி உட்பட இன்னும் பல ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: