17 Dec 2020

கட்டுரை: முப்பத்தி மூன்று வருட கல்விசேவையில் இருந்து ஓய்வு பெறும் பிரதி அதிபர பா.குமரகுருபரன்; மணிவிழா காண்கின்றார்.

SHARE

முப்பத்தி மூன்று வருட கல்விசேவையில் இருந்து ஓய்வு பெறும் பிரதி அதிபர பா.குமரகுருபரன்; மணிவிழா காண்கின்றார்.மட்டக்களப்பு வின்சன் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின். பிரதி அதிபர் பாக்கியமூர்த்தி குமரகுருபரன் B.Com(SP),PGDE,MAAT,ACBA,SLTS-1 ,SLPS-1 முற்பத்தி மூன்று வருட சேவையில் 14.12.2020 திகதி ஓய்வு பெறுகின்றார்.

இவர் மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னைம்பதியை பூர்வீகமாகக் கொண்ட நான்கு பரம்பரை கல்விப்புலத்தை சேர்ந்த அமரத்துவம் அடைந்த பாக்கியமூர்த்த்தி அருளம்பிகாவதி ஆகியோரின் சிரேஸ்ட புதல்வன் இவர் தனது ஆரம்பக் கல்வியினை மட் அரசடி மகா வித்தியாலையத்திலும் (தற்போதைய மஹாஜனா கல்லூரியிலும்); இடைநிலைக் கல்வியினை மட் கோட்டைமுனை மகாவித்pயாலையத்திலும் (தற்போதைய இந்துக் கல்லூரியிலும்) உயர் தரக் கல்வியினை மட் சிவானந்த வித்தியாலையத்pலும் கற்று வணிகத்துறையின் முதல் மாணவர்களில் ஒருவராக யாழ்பாண பலகலைக்கழகத்துக்கு வணிக பட்டத்திற்கு தெரிவாகி சென்று பட்டம் பெற்றார்.

பின்னர் 1985 இல்  மட்டக்களப்பு சர்வோதய மத்திய நிலையத்தில் மாவட்ட சிறுகைத்தொழில் இணைப்பாளராகவும் பின் அதற்கன ஆலோசகராகவும் பணியாற்றிதுடன் பின்  1986இ;ல் இளைஞர் சேவைகள் வேலை வாய்ப்பு அமைச்சில் சிறுகைதொழில் பயிற்சி அதிகாரியாக அகில இலங்கையில் எட்டுப்பேரில் ஒருவராக கடமை புரிந்து பின் காலத்தின் கட்டாயத்தில் வணிக பட்டதாரி ஆசிரியாக 1987 டிசம்பர் 14 ஆம் திகதி இணைந்து மட் மகிழவெட்டுவான் மகா வி;தியாலயத்தில் தனது ஆசிரியர் சேவையை ஆரம்பித்தர்.

அங்கிருந்து 5வருடங்களின் பின் மட் புனிதமிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலைக்கு  இடமாற்றம்  பெற்று 1992இல் வந்து அங்கு ஆசிரியராக, பகுதிதலைவராக, நூலகராக இருக்கும் போது 2006 நடைபெற்ற அதிபர்களுக்கான போடடிப் பரீட்சையில் தெரிவு செயப்பட்டு   இலங்கை அதிபர் சேவையில் தரம் -2 அதிபராக பதவி உயர்வு பெற்று பிரதி அதிபரக கடமையாற்றி 24 வருட சேவையின் பின்னர் மட் வின்சன் பெண்கள் உயர்தர தேசிய பாடசாலைக்கு 2017 யூலை மாதம் பிரதி அதிபராக இடமாற்றம் பெற்று சென்று முதலாம்தர அதிபராக முற்பத்தி மூன்று வருட சேவையில் இன்று ஒய்வு பெற்றுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சேவையிலும் தரம்- 1 பெற்றுள்ளார் என்பதுடன் தந்தை பாட்டன் இருவரும் அதிபர்களாக சேவையாற்றியவர்கள் என்பதும் இங்கு குறிப்பிடதக்கது
பட்டபின் கல்வி டிப்புளோமாவை திறந்த பல்கலைக்கழகத்தில் பெற்றதுடன் இலங்கை கணக்கியல் தொழிநுட்பவியலாளர் கழகத்தின் அங்கத்தவராகவும்(ஆயுயுவு) பட்டைய வியாபர நிர்வகாவாக கழகத்தின் அங்கத்வராகவும்(யுஊடீயு) மேலதிகமான தொழில் தகமையை பெற்றுள்ளார். .2000 ஆம் ஆண்டு தொடக்கம் 2005 ஆண்டு வரை மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரியில் வருகை தரும் விரிவுரையாளரகவும் பணியற்றியதுடன் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பட்ட பின் கல்வி டிப்புளோமா கற்கை நெறிக்கு முதன்மை ஆசிரியரக பணியாற்றி வருகின்றார்.

சமயப்பணி சமூகபணி என்ற வகையில் மட்டக்களப்பு கோட்டைமுனை இளைஞர் கழகத்தின்  தலைவராக இருந்த காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கிடையில் கலை கலாசார போட்டிகளை நடாத்தி தங்க வெள்ளி செம்பு பதக்கங்களை வழங்கியதுடன் பெண்களுக்கான தையல் பயிற்சி நிலையம் ஒன்றினை அப்போது பாராளுமன்ற உறுப்பினராக விருந்த செல்லையா இராஜதுரை அவர்களின் பன்முகபடுத்தப்பட்ட வரவுசெலவு திட்ட நிதியில் இருந்து பெறப்பட்டு நடாத்தியதுடன் பலரை இளைஞர்சேவை அதிகாரிகளாக காரணமாக இருந்தார்.

மட்டக்களப்பு பட்டதாரிகள் ஒன்றியத்தின்  செயளரளராக இருந்த காலத்தில் கிழக்கு பல்கலைக்கழக அபிவிருத்தியிலும் தரிசனம் விளிப்புலனற்றோர் பாடசாலை உருவாக்கியதிலும் தீவிரவாதம் தலை துக்கியிருந்த காலத்தில் மணவர்கள் கல்வியில் அக்கறையுடன் செயல்பட்டார்.

மட்டக்களப்பு கோட்டைமுனை புன்னையம்பதி மகாமாரியமன் ஆலயத்தின் அறங்காவல் சபையின்; தலைவரா இருந்த காலத்தில் ஆலய அபிவிருத்தி பணிகளிலும் குடமுழுக்குகள் இராஜகோபுர திருப்பணி போன்ற திருப்பணிகளை மேற்கொன்டதுடன் ஆலய வளர்ச்சியில் சிறுவயதில் இருந்தே ஈடுபாடு உடையதுடன் அவரின் தந்தை பாட்டன் முப்பாட்டன் ஆகியோரும் இவ்வாயத்தின் தலமையை ஏற்று நடாத்தியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

மட்டக்களப்பு அபிவிருத்p கழகத்தின்  உறுப்பினராகவிருந்த காலத்தி;ல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மணவர்களுக்கான வகுப்புக்களை நாடாத்தியுள்ளார். மட்டக்களப்பு இந்து இளைஞர் சங்கத்தின் ஆயூட்;கால உறுப்பினரும். மட்டக்களப்பு தரிசனம் விளிப்புலன் அற்றோர் பாடசாலையின் ஆரம் அங்கத்தவர்களில் ஒருவரும் மட் சிவனந்ந வித்தியாலய பழையமாணவர் சங்க ஆயூட் கால உறுப்பினராவார் இத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவராக இருந்து ஆசிரியர்களுக்கு பலவேறு தேவைகளையும் நிறைவேற்றி கொடுத்துள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இத்துடன் பல சமூக சமய பணிகளை ஆற்றியுள்ளமை பலரும் அறிவர். அவருடை மாணவர்கள. ஆசிரியர்களாகவும் அதிபர்களாகவும் கணக்காளர்களாகவும் வங்கி முகாமையாளர்களாகவும் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகஸ்களாகவும் பல்களைக்கழக விரிவுரையார்களாகவும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்று உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் மிளிருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.   

 வி ஜீவானந்தன்
மாவட்ட தகவல் அதிகாரி
தகவல் திணைக்களம்.
 
SHARE

Author: verified_user

0 Comments: