12 Dec 2020

மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகளை எஸ்.வியாழேந்திரன், பிள்ளையான், மற்றும் கருணா போன்றவர்களால் தீர்க்க அதிகாரம் இருக்கின்றதா? என ரொலே தலைவர் செல்வம் அடைக்ககலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

SHARE

மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சனைகளை எஸ்.வியாழேந்திரன், பிள்ளையான், மற்றும் கருணா போன்றவர்களால் தீர்க்க அதிகாரம் இருக்கின்றதா? என ரொலே  தலைவர் செல்வம் அடைக்ககலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை பாராளுமன்ற உறுப்பிர்களான எஸ்.வியாழேந்திரன், பிள்ளையான், மற்றும் கருணா போன்றவர்களால் தமிழ் மக்களுடைய வாக்கை பெற்றுக் கொண்டு இந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கின்றதா என ரொலே அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்ககலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் வீதியில் அமைந்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோhவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் சனிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ரொலே அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்ககலநாதன் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்  இதன்போது அவர் Nமுலம் தெரிவிக்கையில்…

மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தில் பிரச்சனை இருப்பதன் காரணமாக நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளும் பேசி  ஒரு உடன் பாட்டிற்கு வந்திருக்கின்றோம். அதனடிப்படையில் வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவாக அனைத்து தமிழ்தேசிய கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். 

வடக்கு கிழக்கிலே மக்களுடைய பூர்வீக நிலங்கள் பூர்வீக குடிகள் என்பதை இல்லாதொழிக்கின்ற திட்டத்தில் அரசாங்;கம் செயற்பட்டு வருகின்றது. வன இலாக பறவைகள் சரணாலம், மகாவலி வலயம், போன்ற திணைக்களங்களை வைத்துக் கொண்டு அரசாங்கம் கபடத்தனமாக எங்களுடைய மக்களின் காணிகளை அபகரித்து வருகின்றது. 

எங்களுடைய வரலாற்றைக் கொண்ட பூர்வீக குடிகள் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த வடக்கு கிழக்கு பிரதேசம் அந்த மக்களின் நிலங்களை சிதைக்கின்றபோது மக்களின் வாழ்க்கையும் சிதைக்கப்படும் அந்தவகையில் தற்போதைய அரசு தமிழ் மக்களுடைய பிரச்சனைகளில் மிகமேசமான செயற்பாடுகளை செய்வதற்கான வழிமுறைகளை கையாண்டு வருகின்றது என்பதை நான் குறிப்பிட்டாக வேண்டும்.

கொரோனா காலத்தில் இராணுவத்தின் பிரசன்னம், நேர்முக தேர்வில் இராணவத்தின் பிரசன்னம். இப்படி மிக்கியமான திணைக்கள பதவிகளிலே இராணுவத்தின் பிரசன்னம். அவ்வாறே முக்கியமான விடயங்களில் முப்படைகளின் ஆளுமையை காட்டுகின்ற செயற்பாட்டை இந்த அரசாங்கம் செய்துவருகின்றது 

இந்த அடிப்படையிலே தமிழர்கள் பிரிந்து கட்சி ரீதியாக பிரிந்து செயற்படுகின்ற போது அவர்கள் பிரித்தாளுகின்ற தன்மையைக் கொண்டு இப்போது மட்டக்களப்பில் எஸ்.வியாழேந்திரன், பிள்ளையான், மற்றும் கருணா போன்றவர்கள் தமிழ் மக்களுடைய வாக்கை பெற்றுக் கொண்டு மட்டக்களப்பில் நடக்கின்ற தமிழ் மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருக்கின்றதா? அவர்;கள் பேசலாம் ஒழிய செயல் வடிவத்தில் ஒன்றுமே செய்ய முடியாது.

எம்மக்களிடம் கூடியதான வாக்கை பெற்ற அவர்கள் மக்களுடைய பிரச்சனையை தீர்ப்பதற்கு அவர்களால் இயலாது என்பதை குறிப்பிட விரும்புகின்றேன். உதாரணமாக எமது பண்ணையாளர்களுடைய பிரச்சனை மிகமோசமாது  அரசாங்கம் குடியேற்றம் செய்கின்ற வழிகளை கையாளுகின்ற போது நான் குறிப்பிட்டவர்கள்  தமிழ் தேசிய கூட்டமைப்பு அத்தனைபேரும் அமைச்சர் சமல் ராஜபஷவிடம் பேசுகின்றபோது எல்லோரும் மூர்க்கதனமாக பேசினோம்.

ஆனால் மாவட்ட அபிவிருத்தி குழுவிலே அதற்கான முடிவுகள் வித்தியாசமாக இருந்தது. ஆகவே மக்களின் கூடுதலான வாக்குகளை பெற்று இந்த அரசாங்கத்துடன்; இருந்து செய்ய வேண்டிய வேலை இதுதான் நிலத்தை பெற்றுக் கொடுத்தால் அது தகுதியுடையதாகும்.

மாவீரர் தினத்தில் புயல் வந்திருந்தால் நல்லாக இருந்திருக்கும் என சரத் பொன்சேக்கா தெரிவித்தர்;. அப்போது நான் பாராளுமன்றத்தில் சொன்னோன் உனக்கு வாக்களித்தற்கு தமிழ் மக்கள் வெக்கப்படுவதாக அவ்வாறே பாராளூமன்றத்தில் விடுதலைப்புலிகள் பற்றியே மக்களிக் பிரச்சனைகளை பேசினால் தமிழ் தேசிய கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும் வந்தேறுகுடிகள் என்கின்றனர்.

அமைச்சர் பிரசன்னா ரணதுங்க  தமிழ் மக்களுக்கு மூன்று நேர சாப்பாடு கொடுத்தால் போதும் என்கின்றார். அழித்துவிட்டோம் வெற்றிவாகை சூடிவிட்டோம், மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கின்றது எனவே நாங்கள் என்ன செய்தாலும் நாங்கள் யாருக்கும் அச்சப்பட  தேவையில்லை என தெரிவிக்கின்ற இப்படியான சிந்தனையுடன் தான் இந்த நாடாளுமன்றமும் அரசாங்கம் இருக்கின்றது. 

எங்கள் மக்கள் உணர்வேடு வாழுகின்ற இனம் மக்கள் இந்த மண்ணுக்காக உயிரை தியாகம் செய்து எங்கள் வாழ்க்கைக்காக அர்ப்பணித்த இனம். எவ்வளவே வரலாற்றைக் கொண்ட இனம்

அரசாங்கம் எற்கனவே மக்களை அழித்து படுகொலை செய்து மனித உரிமை பேரவையிலே விசாரணை செய்யப்படுகின்ற ஒரு நாடாக உள்ளதுடன் இதில் சரத் பொன்சேக்கா உட்பட பலர் இருக்கின்றனர். இந்த அரசாங்கம் மூர்க்கத்தனமாக பல வழிகளிலும் மக்களுடைய இறையான்மையையும் பரவலையும் தடுக்கின்ற செயற்பாடாக செயற்படுகின்றது.

எமது நாடு தன்னிறைவடைந்த நாடு அல்ல் உலக நாடுகளின் அனுசரணையுடன்  செயற்படுகின்ற நாடு சர்வதேசத்துடன் பகைத்துக் கொண்டு செயற்படமுடியாது. அமெரிக்கா, இந்தியா. பிரிட்டன் கனடா எங்களுடைய இனப்பிரச்சனையில் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே எங்களுடைய நிலங்கள் மக்களுடைய பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டுமாக  இருந்தால் கொள்கை ரீதியில் ஒன்றுபட்வர்களாக இருந்தால். ஏன் ஒற்றுமைப்பட முடியாது. இந்;த தர்ணத்தில் ஒற்றுiமாக செயற்படவேண்டும்.

இனப்பிரச்சனை மண்பிரச்சனை சார்ந்த ஒரு தீர்வு திட்டத்தை வழங்க வேண்டியுள்ளது எனவே தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தமது சுய விருப்பத்துக்கு அப்பால் ஒன்றினைந்து செயற்படவேண்டும். அப்படியான ஒரு சூழலை உருவாக்க வேண்டும் 

இந்த எட்டுக்கட்சிகள் கூட்டு தொடர்ச்சியாக கூடி முடிவெடுத்திருக்கின்றனர். வடக்கு கிழக்கிலே இருக்கின்ற அத்தனை தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றினைந்து செயற்படுகின்ற காலத்திலே இருக்கின்றோம்.






SHARE

Author: verified_user

0 Comments: