10 Dec 2020

அடிக்கடி பெய்கின்ற மழையினால் அதிகரிக்கும் டெங்கு நோய்தாக்கம்.

SHARE
அடிக்கடி பெய்கின்ற மழையினால் அதிகரிக்கும் டெங்கு நோய்தாக்கம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி மழை பெய்து வருவதினால் டெங்கு நுளம்பின் பெருக்கமும் அதிகரித்துக்கொண்டு வருகின்றது இதனை கட்டுப்படுத்துவதற்கு வேனுமான நடவடிக்கையினை சுகாதார திணைக்களத்தினர் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பொது மக்கள் தங்களின் விடுகளிலும் சுற்று சூழலிலும் டெங்கு நுளம்புகள் பரவக்கூடிய இடங்களை கண்காணித்து அடிக்கடி சுத்தப்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் அதற்கு மேலதிகமாக நீர்தேங்குகின்ற இடங்கள் மற்றும் பூச்சாடிகளில் நீர்தேங்கிகானப்பட்டால் உடணடியாக அகற்றிவிடுதல்வேண்டம் அதுபோன்று சிறட்டைகள் வெற்று ரின்கள் ஐஸ்கிறிம் கப்கள் எனபன மழைகாலங்களில் கவலையீனமாக வெளியில் விசுவதை கண்டிப்பாக நிறுத்தி உரியமுறையில் அகற்றுவதற்கு விட்டார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

டெங்கு நோய்தாக்கமானது கொரோனா மரணங்களை விடவும் இலங்கையில் அதிகளவான மரணங்களை கடந்தகாலங்களில் ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்தவிடையம் ஆகையினால் நமது சமூகத்தினை பாதுகாக்கவேண்டிய பொறும் ஒவ்வெரு தனிமனிதனுக்கும் உள்ளது அந்தவகையில் யாவரும் ஒன்று இணைந்து நமது சமூகத்தில் பரவிவருகின்ற கொரோனாவினையும் டெங்கு நோய்தாக்கத்தினையும் நாட்டில் இருந்து இல்லாமல் ஆக்குவதற்கு ஒன்றுபடுவேம்.

கடந்வாரம் 120 டெங்கு நோயாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இனங்கானப்பட்டுள்ளனர் இவர்களுக்கான சிகிச்சைகள் நடைபெற்றுவருகின்றது. கொரோனாக்கு மத்தியில் வைத்தியத்துறையினரின் அற்பணிப்பான சேவை இந்தவேளையில் மதிக்கப்படவேண்டிதாகும். குழந்தைகள் சிறுவர்கள் முதியவர்கள் தான் அதிகளவு டெங்கு நோய்தாக்கத்திற்கு உள்ளாகின்றனர் அணைவரும் அவதானமா செயற்படம்படி சுகாதரதுறையினர் வேண்டுகின்றனர்.


SHARE

Author: verified_user

0 Comments: