14 Dec 2020

எதிர்கால ஜனாதிபதி நாமல் ராஜபக்ஸ - ஆரூடம் கூறுகின்றார் சந்திரகுமார்.

SHARE

எதிர்கால ஜனாதிபதி நாமல் ராஜபக்ஸ - ஆரூடம் கூறுகின்றார்

சந்திரகுமார். ஆரம்பத்தில் எவரும்  பொதுசனப் பெரமுனக்கட்சிக்கு மட்டக்களப்பில் ஒத்துழைப்பு வழங்கவில்லை எம்முடன் இனைந்த ஒரு சிலருடன் சேர்ந்துதான் செயற்பட்டோம். ஆரம்பத்தில் இருந்த இளைஞர் அணித் தலைவர் சிறப்பாக செயற்படவில்லை. தற்போது வேணுகோபால் எனனும் புதியவர் கட்சியின் இளைஞர் அணித் தலைவராக பொறுப்போற்றுள்ளார். இதிலிருந்து அவர் மிகவும் திறம்பட இளைஞர்களை வழிநடாத்துவார் என நம்புகின்றோம். இந்நிலையில் நானும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களுக்குப் பின்னால் நிற்போம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இளைஞர்களின் கைகளில்தான் சகல விடையங்களும் தங்கியிருக்கின்றது. 

பிரதமர் அவர்களின் மகன் அமைச்சர் நாமல் நாஜபக்ச அவர்கள் இளைஞர்களுக்குரிய தலைவராக உள்ளார். அவரை நாம் பலப்படுத்த வேண்டும் நாமல் ராஜபக்ஸ அவர்கள் எதிர்கால்தில் ஜனாதிபதியாக வருவார். அவர் இளைஞர்களின் கோரிக்கைகளை ஏற்று நடப்பவர். அவர் வடக்கு கிழக்கு இளைஞர்களிடத்தில் மிகுந்த மரியாதை வைத்துள்ளார். 

என ஸ்ரீ லங்கா பொதுசன முன்னனியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுசன முன்னனியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞரணி மாநாடு ஞாயிற்றுக்கிழமை (13) மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலும் இடம்பெற்றது.

அதனடிப்படையில் மட்டக்களப்பு தொகுதிக்கான மாநாடு மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்திலும், பட்டிருப்புத் தொகுதிக்கான மாநாடு பெரியபோரதீவில் அமைந்துள்ள தனியார் மண்டபத்திலும், கல்குடா தொகுதிக்கான மாநாடு செங்கலடியிலும் இடம்பெற்றன.

கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணி  தலைர் ந.வேணுகோபன் தலைமையில் இடம்பெற்ற மாநாட்டிற்கு பிரதம அதிதிகளாக ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட  இணைப்பாளர் பா.சந்திரகுமார் மற்றும் இளைஞர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த சந்திரகுமார்…. ஸ்ரீ லங்கா பொதுசன பெரமுனக் கட்சி ஆரம்பித்த காலமிருந்தேக அதன் ஸ்தாபகர் பசில் இராஜபக்ஸ அவர்கள் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டு வருகின்றார். இச்செயற்பாடு இலங்கை முழுவதும்  இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக கடந்த தேர்தல்களின் வெற்றிக்கும் இளைஞர்களின் பங்களிப்பே முக்கிய காரணமாகும். ஆனாலும் மட்டக்களப்பில் இளைஞர்களை ஒருங்கிணைத்து செயற்படுத்துவதற்கு கடந்த வருடங்களில் சந்தர்ப்பம் குறைவாகவிருந்தது. இனிவரும் காலத்தில் மட்டக்களப்பிலுள்ள இளைஞர்கள் எம்முடைன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும். ஏனெனில் இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுக்கக்கூடியது ஆளும் கட்சி மாத்திரம்தான்;. 

தற்போதம்கூட இளைஞரு;களின் மத்தியில் தேசியகம் கதைக்கும்போது தேன்போன்றுதான் இருக்கும். ஆனால் நன்றாகச் சிந்தித்தால் இளைஞர்களின் தொழில் வாய்ப்பு உள்ளிட்ட அனைத்தையும் ஆளும் கடசிதான் நிறைவேற்றித் தரமுடியும். எனவே எந்த விடையத்தையும் ஆளும்கட்சிதான் மேற்கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியினால் நாம் செய்வதை பிழை என்றுதான் சுட்டிக்காட்டத்தான் முடியுமே தவிர வேறு எதனையும் செய்ய முடியாது. 

ஆசியாவிலே வியக்கத்தக்கதொரு தலைவர்தான் எமது கட்சியன் ஸ்தாபகர் பசில் இராஜபக்ஸ அவர்கள். அவரின் வழிநடத்தலின்கீழ்தான் நாங்கள் தற்போது மட்டக்களப்பில் களமிறங்கியிருக்கின்றோம். தமிழ்தேசியக் கட்சியிலே இருந்து ஒன்றும் செய்யமுடியாது என அறிந்த பின்னர்  ஆளும் கட்சிக்கு மாறி தற்போது இராஜாங்க அமைச்சராக வந்திருக்கின்ற  வியாழேந்திரன் இராஜாங்க அமைச்சர் மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கிடைத்திருக்கின்ற ஒரு பலமாகும். தமிழர் ஒருவரை மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சராகக் கொண்டு வந்தது போன்று வர இருக்கின்ற மாகாண சபைத் தேர்தலிலும் தமிழர் ஒருவரை கிழக்கில் முதலமைச்சராகக் கொண்டு வருவதற்கு இளைஞர்கள் அனைவரும் ஓரணியில் திகழ வேண்டும். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் ஸ்தாபகர் பஸில் இராஜபக்சவின் கருத்துக்களைக் கேட்டிருந்தோம் என்றால் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இணைந்து மட்டக்களப்பில் தேர்தலில் களமிறங்கிளிருந்தால் 4 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் தெரிவு செய்யப்பட்டிருந்திருப்பார்கள். ஒரு ஆசனம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கிடைத்து, 5 பேரும் தமிழர்கள் இந்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருந்ததிருப்பார்கள்.  என அவர் இதன்போது தெரிவித்தார்.  

SHARE

Author: verified_user

0 Comments: