16 Dec 2020

தனிமைப் படுத்தல் சட்டத்தை மீறி நிகழ்வு நடாத்திய மட்டு.சுற்றுலா விடுதி உரிமையாளர் உட்பட 47 பேர் தனிமைப் படுத்தலில்

SHARE

தனிமைப் படுத்தல் சட்டத்தை மீறி நிகழ்வு நடாத்திய  மட்டு.சுற்றுலா விடுதி உரிமையாளர் உட்பட 47 பேர் தனிமைப் படுத்தலில்.

கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி  வருட இறுதி புத்தாண்டு களியாட்ட நிகழ்வை நடாத்திய மட்டக்களப்பிலுள்ள பிரபல சுற்றுலா விடுதியொன்றின் உரிமையாளர் உட்பட நிகழ்வை ஏற்பாடு செய்த  தனியார் நிறுவனமொன்றின் 46 உறுப்பினர்கள் அடங்கலாக 47 பேர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாக கல்லடி பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் தெரிவித்தார்.

தனிமைப் படுத்தல் சட்டத்தை முழுமையாக மீறி செவ்வாய்க்கிழமை (15) 7 மணியளவில் மட்டக்களப்பு கல்லடியிலுள்ள சுற்றுலா விடுதியில் மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் தனியார் கம்பனியினர் வருட இறுதி நிகழ்வு நடாத்தப்பட்ட வேளை அங்கு சென்ற சுகாதார அதிகாரிகளும் காத்தான்குடி பொலிசாரும் குறித்த விடுதியின் உரிமையாளர் மற்றும் விடுதியில் பணிபுரிவோர் நிகழ்வில் கலந்து கொண்டோரென 47 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நீதிமன்ற அனுமதியின் பேரிலேயே குறித்த நபர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ், கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமிர்தாப் , நாவற்குடா பொது சுகாதார பரிசோதகர் எஸ்.தீரகுமாரன், உட்பட சுகாதார அதிகாரிகள் பொலிசார் அடங்கிய குழுவினரே இச்சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.







SHARE

Author: verified_user

0 Comments: