29 Nov 2020

ஏறாவூர் நகரில் முகக் கவசம் அணியாதோர் மீது சட்ட நடவடிக்கை.

SHARE

ஏறாவூர் நகரில் முகக் கவசம் அணியாதோர் மீது சட்ட நடவடிக்கை.

ஏறாவூர் நகரில் முகக் கவசம் அணியாது வீதிகளிலும் கடைத்தெருக்களிலும் சஞ்சரித்தோர்மீது சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக ஏறாவூர் பொலிஸார் ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஏறாவூர் நகர வர்த்தகர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ஞாயிற்றுக்கிழமை 29.11.2020 இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இந்த நடவடிக்கையின்போது வீதியிலும் கடைத்தெருக்களிலும் முகக் கவசம் அணியாது அல்லது முகக் கவசத்தை கொரோனா வைரஸ் பரவாத உரிய பாதுகாப்பு முறைப்படி அணியாது நடமாடியோரை நீதிமன்ற சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தும் வண்ணம் ஆட்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பேர் 12 குற்றச் சாட்டுப் பதியப்பட்டுள்ள அதேவேளை அவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நடவடிக்கையில் ஏறாவூர் பொலிஸாருடன் ஏறாவூர் நகர பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பாத்திமா ஷ‪hபிறா வஸீம் உட்பட பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களும்  ஏறாவூர் நகர வர்த்தகர் சங்கத் தலைவர் இஸற். ஏ. இனாயத்துல்லாஹ்வுடன் ஏறாவூர் நகர வர்த்தகர் சங்க நிருவாகிகளும் இணைந்து கொண்டனர்.

கடைத்தெருவுக்கு கடை கடையாகச் சென்ற சுகாதார அதிகாரிகளும் வர்த்தகர் சங்க நிருவாகிகளும் முகக் கவசம் அணிதலின் அவசியம் கைகளைக் கழுவுவதற்காக கடைகளில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் ஆள் இடைவெளி பேணலின் அவசியம்பற்றியும் வலியுறுத்தினர்.






SHARE

Author: verified_user

0 Comments: