13 Nov 2020

பசுமை பேணும் மாநகர திட்டத்தின் கீழ் குறுங்காடுகளை உருவாக்கும் திட்டம் ஆரம்பம்

SHARE
பசுமை பேணும் மாநகர திட்டத்தின் கீழ் குறுங்காடுகளை உருவாக்கும் திட்டம் ஆரம்பம்.
மட்டக்களப்பு மாநகர சபையின் சிறுவர்சினேக மாநகரக் கட்டமைப்பின் ஊடாக பசுமை பேணும் மாநகரை உருவாக்கும் நோக்கில் குறுங்காடுகளை (mini forest) உருவாக்கும் செயற்றிட்டம் இன்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது.  
மட்டக்களப்பு மாநகர சபையுடன் இணைந்து யுனிசெப் மற்றும் செர்றி நிறுவனங்களினால்  மட்டக்களப்பு மாநகருக்குள்  முன்னெடுக்கப்பட்டு வரும் சிறுவர்சினேக மாநகர திட்டத்தின் கீழ் நகரை அழகுபடுத்தும் பல வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  

இதன்படி பசுமை மிகு மாநகரினை உருவாக்கும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் துணையுடன் மட்டக்களப்பு-திருமலை பிரதான வீதியில் பிள்ளையாரடி பிரதேசத்தில் பசுமை பேணும் குறுவனத்தினை (mini forest) உருவாக்குவதற்கான கட்டமைப்புக்கள் வடிவமைக்கப்பட்டு அங்கு மரக்கன்றுகளும் நட்டு வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் எந்திரி சசிநந்தன், செர்றி (CERI) நிறுவனத்தின் தேசிய நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் வி.தர்சன், செயற்திட்ட உத்தியோகத்தர் பவீணா மோனராஜா ஆகியோர் கலந்து கொண்டு மர கன்றுகளை நட்டு வைத்தனர்.











SHARE

Author: verified_user

0 Comments: