9 Nov 2020

குருக்கள்மடம் - அம்பிளாந்துறை படகுப்பாதை பழுதடைந்து நீரில் மூழ்கியுள்ளது. - போக்குவரத்து இடம்பெறவில்லை.

SHARE



குருக்கள்மடம் - அம்பிளாந்துறை படகுப்பாதை பழுதடைந்து நீரில் மூழ்கியுள்ளது. - போக்குவரத்து இடம்பெறவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதிக்கும், எழுவாங்கரைப் பகுதிக்கும் இடையிலான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாகக் காணப்படுவது மட்டக்களப்பு வாவியூடாக குருக்கள்மடத்திலிருந்து அம்பிளாந்துறை ஊடாகச் செல்லும் நீர்வழிஇயந்திரப் படகுப்பாதையாகும். இந்த இயந்திரப்படகு மிக நீண்ட காலமாக பழுதடைவதும், மீண்டும் அதனைத் புணரமைத்து சேவைக்கு விடுவதுமாகத்தான் இதுவரையில் இருந்து வருகின்றது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (08) மாலை 7 மணியளவில் சேவையிலீடுபட்ட பின்னர் உரிய இடத்தில் தருத்தி நிறுத்திவிட்டு நடாத்துனர்கள் வீடு சென்றுள்ளனர். வழக்கம்போல் திங்கட்கிழமை(09) இயந்திரப்படகுச் சேவையை ஆரம்பிப்பதற்காகச் சென்ற நடாத்துனர்களுக்கு எதிர்பாராத சம்பவம் ஏற்பட்டிருந்தது. குறித்த இயந்திரப் படகின் கீழ்புறத்தில் ஏற்பட்டிருந்த துவாரங்கள் ஊடாக ஆற்று நீர் உட்புகுந்து இயந்திரப்படகின் அரைவாசி நீரினுள் முற்றாக மூழ்கியுள்ளதுடன், படகில் பொருத்தப்பட்டிருந்த இரண்டு இயந்திரங்ளும் முற்றாக ஆற்றில் மூழ்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.

இதனால் தற்போது மட்டக்களப்பு வாவியை ஊடற்றுத்து மேற்கொள்ளும்  குருக்கள்மடம் - அம்பிளாந்துறை ஊடக இடம்பெறும் இயந்திரப் படகுச் சேவை திங்கட்கிழமை இடம்பெறவில்லை குறித்த போக்குவரத்து மார்க்கத்தைப் பயற்படுத்தும் விவசாயிகள், பொதுமக்கள், விவயாபாரிகள் என ஏராளமானோர் திரும்பிச் சென்றனர்.

எனினும் குறித்த இயந்திரப்படகு நீரில் மூழ்கியுள்ளமை தொடர்பில் வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்கு தாம் தெரிவித்துள்ளதாக அதன் நடத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.

மிக நீண்டகாலமாக பழுதமைந்த வண்ணம் சேவையில் ஈடுபட்டுவரும் இந்த இயந்திரப்படகு மிகவும் மோசமாக பழுதடைந்துள்ளதாகவும், அதன் கீழ்ப் பாகத்தில் பலத்த துவாரங்கள் உள்ளதாகவும், இதனைப் புணரமைப்பதை விடுத்து புதிய இயந்திரப்படகே இப்போக்குவரத்து மார்க்கத்திற்குத் தேவை இல்லையேல் குறித்த இயந்திரப் படகை புணரமைத்து மீண்டும் சேவையீலீடுத்தினாலும், அது மிகவும் ஆற்றில் ஆபத்தான பயணமாகத்தான் அமையும் என குறித்த இயந்திரப்படகு நடாத்துனர்கள் தெரிவிக்கின்றனர்.

















SHARE

Author: verified_user

0 Comments: