14 Nov 2020

சமூக நோக்காக செயற்பட்ட சித்தாண்டி மாவடிவேம்பு காளி கோவில் பரிபாலனம்.

SHARE

சமூக  நோக்காக செயற்பட்ட சித்தாண்டி மாவடிவேம்பு காளி கோவில்  பரிபாலனம்.வரலாற்று சிறப்புபெற்ற   மட்டக்களப்பு சித்தாண்டி மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி  அம்மன் ஆலயத்தில்  இம்முறை  கேதாரகௌரி விரத பக்தர்களின்  நலனைக் கருத்திற்கொண்டு  இலவசமாக இம்முறை  கேதாரகௌரி காப்பினை  ஆலய பரிபாலனம்  வழங்கி வைத்தது.

பல ஆண்டு காலமாக  ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்  கேதார கௌரி விரதம்  நூற்றுக்கணக்கான பக்தர்களின்  பிரசன்னாத்துடன்  இடம்பெற்று வருகின்றமை வழமையாகும்.

இம்முறை  1500க்கும் மேற்பட்ட  கேதாரகௌரி பக்தர்கள்  ஆலயத்தில்  விரதத்தினை அனுஷ்டித்த நிலையில் 

நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோவிட் வைரஸ்   ஏற்பட்டிருக்கும் நிலையில் சுகாதார நடை முறையைக் கடைப்பிடித்து  ஆலய வழிபாடுகள் நடைபெற்றது. கோவிட் காலட்டத்தில்  மக்களின் வாழ்வாதார பொருளாதாரம் பாதிக்கப்பட்டு   வருமானமும் அன்றாட வாழ்விலும் பாதிக்கப்பட்டிருக்கின்றபோது இவ்வாறான நிலைமையினை கருத்தில் கொண்டு  ஆலய நிர்வாகம்  இம்முறை பெட்டி காப்பு  பூ காப்பு என்ற முறையில்லாமல் அனைவருக்கும்  எவ்விதமான கொடுப்பனவுகளை பெறாமல்  இலவசமாக ஆலய பரிபாலனம்  மக்களின் நலனை கருத்திற்கொண்டு  எடுத்துக்கொண்ட முடிவுக்கு அமைய  இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

ஆலயங்களுக்கு பக்தர்கள் வருகின்ற   நிலைமையினை கருத்தில் கொண்டு  சுகாதார நடைமுறையை  கடைப்பிடித்து பரிபாலனம் விரதகாரர்கள்  இருக்கின்ற வீடுகளுக்குச் சென்று  குறித்த கேதார கௌரி விரத காப்பு வழங்கிவைக்கப்பட்டது.

வருடாந்தம்  கேதாரகௌரி விரதம் மூலமாக  பெறப்படும் வருமானமாக  குறித்த  ஆலயத்திற்கு  சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட  வருமானம் வருடாந்தம் கிடைத்த நிலையில்  இம்முறை மக்களின் நலனை கருத்திற்கொண்டு  வருமானத்தை தவிர்த்து  இவ்வாறான சமூக  நலன்சார்ந்த செயற்பாட்டை  சித்தாண்டி  மாவடிவேம்பு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய  பரிபாலனம் எடுத்துக்கொண்ட முயற்சியானது குறிப்பிடத்தக்கது.  












SHARE

Author: verified_user

0 Comments: