13 Nov 2020

பிரதமர் பொத்துவில் முஹுது மகா விகாரைக்கு கண்காணிப்பு விஜயம்.

SHARE


பிரதமர் பொத்துவில் முஹுது மகா விகாரைக்கு கண்காணிப்பு விஜயம்.

அம்பாறை, பொத்துவில்லில் அமைந்துள்ள முஹுது மகா விகாரைக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ புதன்கிழமை (2020.11.11) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

விகாரைக்கு விஜயம் செய்த கௌரவ பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டதை தொடர்ந்து மரியாதைக்குரிய மஹாசங்கத்தினரிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

வரலாற்று சிறப்புமிக்க முஹுது மகா விகாரையின் விகாராதிபதி, கிழக்கு மாகாணத்தின் பிரதான சங்கநாயக்கர், வணக்கத்திற்குரிய வரகாபொல இந்தசிறி தேரர்;, வணக்கத்திற்குரிய அக்கரைப்பற்று ஸ்ரீ விஜயராமாதிபதி தேவகொட சோரத தேரர், பௌத்தயா அலைவரிசையின் தலைவர் வணக்கத்திற்குரிய பொரளந்தே வஜிரஞான தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் குறித்த சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மரியாதைக்குரிய மஹாசங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து கௌரவ பிரதமரை ஆசிர்வதித்தனர்.

முஹுது மகா விகாரையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட கௌரவ பிரதமர் விகாரையின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

விகாரைக்கு சொந்தமான இடம் சட்டவிரோத குடியிருப்பாளர்களின் பிடியிலுள்ளமை தொடர்பில் கடந்த அரசாங்க காலப்பகுதியில் பெரும் சர்ச்சை காணப்பட்டது.

அப்பிரச்சினையை தீர்த்து, முஹுது மகா விகாரைக்கு சொந்தமான காணியை அடையாளமிட்டு, அதனை புனித பூமியாக பெயரிட்டு அதற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு கௌரவ பிரதமரும், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனக்கு அறிவுறுத்தியதாக குறித்த சந்தர்ப்பத்தில்  கலந்து கொண்டிருந்த புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த பூமியை பாதுகாக்கும் பொருட்டு கௌரவ பிரதமரின் தலையீட்டுடன் கடற்படை துணைக்குழுவொன்றை நிறுவுவதற்கு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வரலாற்று சிறப்புமிக்க முஹுது மகா விகாரைக்கு சொந்தமான 72 ஏக்கர் நிலப்பரப்பை பாதுகாத்து தருமாறும், கிழக்கு மாகாணத்தில் அடையாளப்படுத்தப்படாத தொல்பொருள் பிரதேசங்களை பாதுகாத்து தருமாறும், முஹுது மகா விகாரையின் விகாராதிபதி, கிழக்கு மாகாணத்தின் பிரதான சங்கநாயக்கர், வணக்கத்திற்குரிய வரகாபொல இந்தசிறி தேரர் கௌரவ பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

கௌரவ பிரதமரின் தலைமையில் 2003ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க முஹுது மகா விகாரையின் தாதுகோபுர நிர்மாணப் பணிகள் இதுவரை நிறைவுசெய்யப்பட்டுள்ளதாக விகாராதிபதி வணக்கத்திற்குரிய வரகாபொல இந்தசிறி தேரர் கௌரவ பிரதமரிடம் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க, அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமான டப்ளிவ்.டீ.வீரசிங்க, கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வுபெற்ற) ஆனந்த பீரிஸ், அம்பாறை மாவட்ட செயலாளர் என்.எல்.டப்ளிவ் பண்டாரநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த கண்காணிப்பு விஜயத்தை தொடர்ந்து சுற்றுலாத் தலமாக விளங்கும் அறுகம்பே பிரதேசத்தில் கடலரிப்பினால் பாதிப்பிற்குள்ளாகும் பிரதேசத்தையும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கண்காணித்தார்.

பிரதமர் ஊடக பிரிவு.







SHARE

Author: verified_user

0 Comments: