11 Oct 2020

பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்ட நிலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் ஆரம்பம்.

SHARE

பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்ட நிலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் ஆரம்பம்.

கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிகளுக்கு மத்தியில் இவ்வாண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் காலை 9.30 மணிக்கு ந3hடளாவிய ரீதியில் ஆரம்பமாகின.

பொலிஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட்ட நிலையில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகள் இடம்பெற்றன.

சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்களும் தமிழ் மொழிமூலம் 83622 மாணவர்களுமாக இம்முறை புலமைப்பரிசில் தேர்வுக்கு 331694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கு அமர தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்தார்.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கமைய இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கம்பஹா மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. 






SHARE

Author: verified_user

0 Comments: