27 Sept 2020

மென்திறன் பயிற்சியைப் பூர்த்திசெய்த பயிலுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

SHARE


மென்திறன் பயிற்சியைப் பூர்த்திசெய்த பயிலுனர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மவட்டம் புதுக்குடியிருப்பில் இருந்து இயங்கிவரும், விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் செங்கலடி பயிற்சி கிளையில் வெரன்டினா நிறுவனத்தின் நிதியுதவியுடன் மென்திறன் பயிற்சியினை பூர்த்திசெய்த பயிலுனர்களிற்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (25) விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆத்மீக அதிதியாக மட்டக்களப்பு கல்லடி இராமகிருஸ்ண மிஸன் சுவாமி ஸ்ரீமத் நீலமாதவானந்தா மகராஜ் அவர்கள் கலந்து கொண்டிருந்தார். மேலும் இந்நிகழ்வில், ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்ணம், உயர் கற்கை நிறுவன பணிப்பாளர் எஸ்.ஜெயபாலன், வெரன்டினா நிறுவனத்தின் மாவட்ட முகாமையாளர் எஸ்.தினேஸ், சமூக நலன்புரி அமைப்பின் இணைப்பாளர் சிவசுந்தரி பிரபாகரன், விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பணியாளர்கள், பயிலுனர்கள் மற்றும் பெற்றார் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.

பாடசாலைக் கல்வியின் பின்னர் தொழில் பாதையினை திட்டமிட வேண்டும் என்பதற்காக இளைஞர்களை வலுப்படுத்தும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக வெரன்டினா நிறுவனத்துடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட மென்திறன் பயிற்சியினை சிறப்பாக பூர்த்திசெய்த பயிலுனர்களிற்கு இந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை முன்னெடுத்து மாணவர்களிற்கு தொழில் வாய்ப்பினை உருவாக்குவதன் மூலமாக சமூக பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் பயணிக்கு எமது கல்லூரியியுடன் வெரன்டினா போன்ற நிறுவனங்கள் இணைந்து செயலாற்றுவது மிகவும் உறுதுணையழிக்கின்றது என்றும், இது போன்று இன்னும் பல செயற்பாடுகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கு விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி தயராக இருப்பதாக அதன் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.

   














SHARE

Author: verified_user

0 Comments: