21 Sept 2020

கடற்கரையை சுத்தப்படுத்தும் மற்றும் கடற்கரை வளங்களை பாதுகாக்கும் வாரம் மண்முனைப் பற்றில் ஆரம்பித்து வைப்பு.

SHARE

(ரகு)

கடற்கரையை சுத்தப்படுத்தும் மற்றும் கடற்கரை வளங்களை பாதுகாக்கும் வாரம் மண்முனைப் பற்றில் ஆரம்பித்து வைப்பு.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஆரையம்பதி கடற்கரை நரசிம்மர் ஆலயத்தை அண்மித்த பகுதியில் மண்முனைப்பற்று பிரதேச செயலகம், பிரதேச சபை, கடல்சார் சூழல் அதிகாரசபை, மற்றும் லயன்ஸ் கழகம், ஆகிய அமைப்புக்கள் ஒருங்கிணைந்து  கடற்கரையை சுத்தப்படுத்தும் தினம் மற்றும் கடற்கரை வளங்களை பாதுகாக்கும் வாரம் நிகழ்வு திங்கட்கிழமை(21) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கடற்கரை அண்டிய பகுதிகளில் கடல்சார் சூழலிற்கும் வளங்களிற்கும் பாதகமான முறைமையில் மனிதரால் சில செயற்பாடுகள் ஏற்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், ஒவ்வொரு வருடமும் புரட்டாதி மாதம் 21 ஆம ;திகதி தொடக்கம் 25 ஆம் திகதி வரை கடற்கரை வளங்களை பாதுகாக்கும் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வரப்படுகின்றன அந்த வகையில் இந்தாண்டிற்கான சர்வதேச கடற்கரை வளங்களை பாதுகாக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் ஆரையம்பதி கடற்கரையை அண்மித்த பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் மகேந்திரலிங்கம் மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளர் கே.ஸ்ரீபதி கடல்சார் சூழல் அதிகாரசபையின் மாவட்ட உத்தியோகத்தர் தயாரூபன், சிரேஷ்ட சமுர்த்தி முகாமையாளர் (மாவட்ட அலுவலகம்) ஜீவரெட்ணம் மனோகிதராஜ், மண்முனைப்பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.எஸ்.எப்.ஆர்.பரீட், கடற்படையின் லெப்டிணனன்ட் கொமாண்டர் திஸாநாயக்க, சர்வதேச லயன்ஸ் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய ஆலோசகர் மற்றும் லயன்ஸ் மகளிர் உறுப்பினர் திருமதி லயன்ஸ் பாரதி பாஸ்கர், மற்றும் சர்வதேச லயன்ஸ்கழக மட்டக்களப்பு பிராந்திய ஆலோசகர் லயன்ஸ் ராஜர் லயன்கழகங்களின் ஏனைய பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்களும் மண்முனைப்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இராணுவ அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

 










SHARE

Author: verified_user

0 Comments: