14 Sept 2020

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாலர்களுக்கான அனர்த்தம் தொடர்பான பயிற்சிக்கருத்தரங்கு.

SHARE

மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியளாலர்களுக்கான அனர்த்தம் தொடர்பான பயிற்சிக்கருத்தரங்கு.

அனர்த்தங்களில் இருந்து பொது மக்களை பாதுகாப்பதற்கான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்தினுடாக மக்களை எவ்வாறு அனர்தங்கள் நிகழும் போது பாதுபாப்பது என்பது தொடர்பான கலந்துரையாடல்  திங்கள்கிழமை (14) மாவட்ட செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

இயற்கை அனர்த காலங்களில் மக்களுக்கு செய்திகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பான பயிற்சி கருத்தரங்காக அது அமைந்திருந்தது. 

மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன்இ நேத்ரா தொலைக்காட்சியின் உதவிப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.மோஸஸ்இ உள்ளிட்ட பலர்  இதன்போது இத்துறையில் அனுபவம்வாய்ந்த வளவாளர்களாகக் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அனர்தங்கள் இயற்கையாகவும் செயற்கையாகவும் அதாவது மனிதர்களாளும் ஏற்படுவதற்கான அதிகளவு வாய்ப்புக்கள் உள்ளவேளைகளில் பத்திகையாளர்கள் எவ்வாறு மக்களுக்கு செய்திகளை வழங்குவது என்பன பற்றிய விடைங்களை பத்திரிகையாளருடன் பகிர்ந்துகொள்ளப்பட்டன. இந்த பயிற்சிக்கருத்தரங்கில் மட்டக்களப்பு மாவட்ட ஊடக வியலாளர்கள்  கலந்து கொண்டிருந்ததாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத் தெரிவித்தார்.

இப்பயிற்சிக்கருத்தரங்கானது அரசாங்கத்தின் விரிவான நிலைபெறான அபிவிருத்தி செயல் திட்டத்தினுடாகவே செயற்படுத்தப்பட்டு வருகின்றது இடர்காலங்களில் சிறுவர்கள் முதியவர்கள் மற்றும் ஏனை மக்களையும் அனர்தங்களில் இருந்து எவ்வேளையும் விழிப்புடனும் பாதுகாப்புடனும் இருப்பதற்கு அரசாங்க உத்தியோகத்தர்களும் பத்திகைத்துறையினரும் உதவியாக இருப்பது அவசியமானது என உனர்ந்து இத்திட்டங்களை அரசு முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.     









SHARE

Author: verified_user

0 Comments: