22 Sept 2020

அம்பாரை மாவட்டத்திலுள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகளைத் திருத்துவதற்கான மானியக் கொடுப்பனவு

SHARE

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாரை மாவட்டத்திலுள்ள 23 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வீடுகளைத் திருத்துவதற்கான மானியக் கொடுப்பனவின் 2ம் கட்டக் கொடுப்பனவு வழங்கி வைக்கப்பட்டது.
அம்பாரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஆளுனரது மக்கள் சந்திப்பின் போது இதற்கான கொடுப்பனவுக் காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜஹம்பத், அம்பாரை மாவட்டஅரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளர் ஜே.ஜனார்த்தனன், பொது முகாமையாளர் ஆர்.நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தி;ன பதியத்தலாவ, சம்மாந்துறை, உகன, வளத்தாப்பிட்டி, சாய்ந்தமருது, திருக்கோவில் , பொத்துவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்தவர்களுக்கு இரண்டாம் கட்டக் கொடுப்பனவாக 60ஆயிரம் ரூபா வழங்கப்பட்டது.

மொத்தமாக ஒரு லட்சத்து 50ஆயிரமம் ரூபா கொடுப்பனவானது முதல் கட்டத்தில், 50ஆயிரம், மூன்றாம் கட்டத்தில் 40ஆயிரமும் வழங்கப்படுகிறது.

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையானது மாகாணத்தின் திருகோணமலை,அம்பாரை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் 2019ஆம் ஆண்டில் 75 வீடுகளுக்கும், 325 மலசல கூடங்களுக்கும் நிதிகளை வழங்கியிருந்தது.
கிழக்கு மாகாண ஆளுனரது ஆலோசனையின் அடிப்படையில் இவ்வருடம் முதல் வீடுகள் திருத்துவதற்கான கொடுப்பனவாக 3 லட்சம் ரூபா வீதம் 500 வீடுகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார். Ampara Media Unit.








SHARE

Author: verified_user

0 Comments: