13 Aug 2020

சுவாமி விபுலானந்தரின் சமாதிக்கு நிழல் ஏற்ப்படுத்தும் வகையில்ஆன கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்

SHARE

மட்டக்களப்பிற்கு பெருமைசேர்த்த முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தருக்கு மட்டக்களப்பு கல்லடியில் சிவானந்த வித்தியாலையத்திற்கு அருகில் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதிக்கு வெயில் மழையில் பாதிப்பு ஏற்ப்படாத வகையில் நிழல் ஏற்ப்படுத்தும் வகையில்ஆன கட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் நாளை (14.08.2020) காலை 7.00 மணிக்கு அடிக்கல் நாட்டு விழா இராமகிருஷணமிசன் சுவாமிகளின் ஏற்பாட்டினால நடைபெறவுள்ளது.
குறிப்பாக தமிழ் பேசும் உலகிற்கு அளப்பெரிய சேவையினையாற்றிய முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் இயல் இசை நாடகம் எனும் முன்று துறைக்கும் சிறந்த சேவையாற்றிய மாமேதையான துறவிக்கென ஒரு அரும்பொருள் காட்சியகம் ஒன்றை அமைப்பதற்கான ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ ராமகிருஷணர் கோவில் புனருத்தாரண திருப்பணிகள் நிறைவேறியதும் முன்னேடுக்கப்படவுள்ளதாக சுவாமி நீலமாதவானந்தர் உதவி பொது முகாமையாளர் தெரிவித்தார்.

நாளை நடைபெறவிருக்கும் புணிதமான கருமத்தில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபை மட்டக்களப்பு. பொதுச்செயலாளர ச.ஜெயராஜா வேண்டுகொள்விடுத்க்கின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடியில் சிவானந்தா வித்தியாலையத்தினையும் இலங்கையில் ராமகிருஷண மிஷன் இலங்கைக் கிளையினையும் சுவாமி விபுலானந்தர் காலத்தில் அவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது அது மாத்திரம் அல்ல அவரால் 26 பாடசாலைகள் கொழும்பு மட்டக்களப்பு கிளிநொச்சி முல்லைத்தீவு யாழ்ப்பாணம் அம்பாறை மற்றும் மலையகம் போன்ற நாட்டில் பல பாகங்களிலும் பாடசாலைகள் நிறுவப்பட்டு கல்வி கலாசார ஆன்மீக பொருளாதார பணிகள் ஆற்றிவருவது சுவாமி விபுலானந்தர்ன் ஆசிர்வாதமாகும்.

சுவாமி விபுலானந்தருக்கான அருங்காட்சியகம் கிழக்கு பிரதேசத்தில் அமைக்கப்படுவது மிகவும் அவசியமாகும் அவரினால் படைக்கப்பட்ட பல இலக்கண நூல்கள் யாழ் நூல் போன்றவைகளும் அதைத்தவிர அவருடைய ஆராச்சிக்கு உட்படுத்தப்பட்ட நூல்கள் மற்றும் இசைக்காற்றிய பங்குகள் தமிழுக்காற்றிய பங்களிப்பு தனது துறவறம் தொடர்பான வரலாறுகளை அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படவேண்டயது அவசியமாகும்.  



SHARE

Author: verified_user

0 Comments: