26 Aug 2020

காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி ஒரு இனக்கப்பாட்டிற்கு தமிழ் தலைமைகள் வரவேண்டும் - துரைரெத்தினம்.

SHARE

 


காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி ஒரு இனக்கப்பாட்டிற்கு தமிழ் தலைமைகள் வரவேண்டும் - துரைரெத்தினம்.

31 வருடங்களுக்கு பிற்பாடு இந்த 13 திருத்தச் சட்ட மாகாண சபை முறைமையை தமிழ் கட்சிகள் அனைத்தும், இன்று ஏற்றுக் கொண்டு அமுல்படுத்தப்பட வேண்டும் என இந்திய இலங்கை அரசாங்கத்திடமும் தமிழ் தலைமைகள் வேண்டுகோள் விடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.

எனவே இந்த காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி ஒரு இனக்கப்பாட்டிற்கு தமிழ் தலைமைகள் வரவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாண சபை சிரேஸ்ட உறுப்பினர் இரா.துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப்,பத்மநாபா மன்ற காரியாலயத்தில்  புதன்கிழமை (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது ஒரு பௌத்த நாடு என்று ஜனாதிபதி சொல்லும் அளவிற்கு அரசியல் ரீதியாக பலமிக்க ஒரு அரசாங்கம் ஆளும் கட்சி ஆட்சி அமைத்து உருவாக்கியிருக்கின்றது. இது சிறுபான்மையினருக்கு நன்மையா?  தீமையா? ஏன்று பார்க்கும் போது இலங்கையில் பல மொழி பல கலாச்சாரம் பல இனங்கள் வாழுகின்ற இந்த நாட்டில் ஜனாதிபதி பௌத்த நாடாக அமுல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிப்பது சிறுபான்மையினரால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாகும்.

இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி இந்தளவுக்கு  சென்றுள்ளார் என்ற கேள்வி அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களை தொற்றி நிற்கின்றன எனவே இந்த கொள்கையை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

இந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டிருக்கின்ற பூதகரமான விடயம் இது ஒரு பௌத்த நாடு எனவும், 19 வது  திருத்தச்சட்டம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். அல்லது இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் எனவும் சிறுபான்மை இன மக்களுக்காக இலங்கை இந்திய அரசாங்கங்களினால் உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச் சட்டம் ஊடாக நாட்டிலும் 9 மாகாணங்களில் அமுலில் உள்ள மாகாண சபை முறைமை ஆகிய இந்த 3 விடயங்கள் தொடர்பில் இலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியாக மட்டுமல்ல, உலக நாடுகளில் பேசுப்படும் விடயமாக ஒரு பேச்சுப் பொருளாக மாறியிருக்கின்றன.

இந்த 13 வது திருத்தச்சட்டம் 1987 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை,இந்திய ஒப்பந்தம் ஊடாக முழு நாட்டிலும் மாகாணசபை முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது இதில் இலங்கையிலுள்ள 9 மாகாணத்தில் 7 மாகாணத்தில் தெரிவு செய்யப்படுகின்ற முதலமைச்சர்கள் சிங்கள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள்.

கிழக்கு மாகாணத்தல் ஒரு முஸ்லீம் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவரும், வடக்கு மாகாணத்தில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த தமிழரான ஒரே ஒரு தமிழர் இலங்கையில் முதலமைச்சராக இருந்திருக்கின்றார்.

மாகாண சபையில் கொள்கை ரீதியான முடிவுகளை எடுத்து முதலமைச்சர் அமுலாக்கப்படும் போது அது அரச இயந்திரங்கள் மூலமாகவே அது அமுலாக்கப்படும். அரச நிர்வாகம் என்பது இந்த நாட்டில் சுயாதீனமாக செயற்படுகின்ற ஒரு அமைப்பு. எனவே இந்த விடயத்தில் தமிழர்களை சந்தேகம் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

என்ன கொள்கைகளை மக்கள் பிரதிநிதிகள் தீர்மானித்தாலும் அதை அமுல்படுத்தப்படுவது அரச நிர்வாகம் ஊடாக என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும். இந்த 13 திருத்தச் சட்ட மாகாண சபை முறைமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு , அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தாவின் ஈபி.டி.பி கட்சி , சி.சந்திரகாந்தன் ரி.எம்.வி.பி கட்சி, மலையக தமிழ் கட்சிகள், 31 வருடத்துக்கு பிற்பாடு இதை ஏற்றுக் கொண்டு இதை அமுல்படுத்தப்பட வேண்டும் என, இந்திய அரசாங்கத்திடமும்  இலங்கை அரசாங்கத்திடமும் தமிழ் தலைமைகள் வேண்டுகோள் விடுத்து, 31 வருடத்திற்கு பிற்பாடு தான் தமிழ் தலைமைகளும் பேசுகின்ற அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கின்றது.

நான் 3 தடவைகள் மாகாண சபையில் இருந்தவன் என்ற அடிப்படையில் இந்த மாகாணசபை முறைமையில் கல்வி, சுகாதாரம், உள்ளூராட்சி, விவசாயம், நீர்ப்பாசனம், இன்னும் பல விடயங்கள் தொடர்பாக மத்திய அரசாங்கம் பல அதிகாரங்களை மாகாண சபைக்கு வழங்கியிருக்கின்றது.  ஆனால் 31 வருடங்களளாக காணி, பொலிஸ் தொடர்பான அதிகாரங்கள்  அமுல்படுத்தப்படவில்லை.

ஆனால் இரண்டும் அமுல்படுத்தப்படவில்லை என்பதற்காக, இந்த இரண்டு விடயங்களில் நாங்கள் முரண்படாமல் இந்திய, இலங்கை அரசுகள் ஊடாக இந்த காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக இலங்கை அரசுடன் பேசி ஒரு இனக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.

ஒரு இனக்கப்பாட்டிற்கு வருவதன் மூலம் தான் நாங்கள் எதிர்காலத்தில் பல நல்ல விடயங்களை மாகாணசபை முறைமையில் வாய்ப்புக்களாக அமையும் எனவே 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்தப்பட வேண்டும் என கோருகின்ற தலைமைகள் காணி பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பாக அரசாங்கம் இந்திய அரசாங்கத்துடன் பேசி ஒரு பகை முறைபாடு இல்லாதவாறு ஒரு இனக்கப்பாட்டிற்கு வரக் கூடியவாறு அதை செயற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றேன் என்றார்.  (tx:vom)



SHARE

Author: verified_user

0 Comments: