16 Aug 2020

நல்லாட்சி என்பது அரசிடம் மட்டும் எதிர்பார்க்கும் விடயம் அல்ல.

SHARE

(ராஜ்)

நல்லாட்சி என்பது அரசிடம் மட்டும் எதிர்பார்க்கும் விடயம் அல்ல. மக்களுக்கு பொறுப்பச்சொல்லவல்லமைப்புக்களுக்கம்  அதனை பின்பற்ற கடமைப்பாடுடையது. 

என திருகோணமலை மாவட்ட உதவி மாவட்ட செயலாளர் ந.பிரதீபன் தெரிவித்தார் .திருகோணமலை கலாச்சார மண்டபத்தில் இந்து சமய கலாசார திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து சனிக்கிழமை நடாத்திய செயலமர்வில் தலமையுரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 

திருகோணமலை மாவட்டத்தில் 324 ஆலயங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான அறநெறிப்பாடசாலை கள் உள்ளன. 90 இந்து நிறுவனங்கள்  பட்டியலில் உள்ளன. இவ்வமைபுக்களில் பல முறையாக இயங்குவதில்லை. அமைப்புக்கள் நல்லாட்சி யின் விழுமியங்களை பின்பற்றி செயலாற்ற வேண்டும். மக்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு பொறுப்பும் சொல்லும் வகையில் வெளிப்படை தன்மையுடன் செயலாற்ற வேண்டும். 

இந்து மயான பராமரிப்பு பணிகளில் நிலவும் குறைபாடு பற்றி இங்கு கேள்வி எழுப்பப்பட்டது குறித்த பணிக்கு பொறுப்பான அமைப்பு எமது அங்கிகாரம் பெறாத நல்லாட்சி இல்லாத அமைப்பாகும். அவர்கள் வெளிப்படையாக செயற்படாத அமைப்பு. அதற்குரிய பல நடவடிக்கைகளை நாம் எடுத்துள்ளோம். 

மாவட்டத்தில்  உள்ள 90 அமைப்புக்களில் 50இற்கும் அதிகமான இந்து இளைஞர் மன்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பல இயங்குவதில்லை. அவற்றை மீள இயங்க வைக்க தொடர்புடைய வர்கள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவற்றை யாரும் தடுக்க முடியாது. 

அவை சுயாதீனமானவை. இவற்றை சிறந்த முறையில் வழிநடத்த திணைக்களத்தினால் வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதனைப்பயன்படுத்தி இவற்றை மக்களின் சேவையை முன்னகர்தி பணியாற்ற வேண்டும். கொரோனா காரணமாக இடைநிறுத்தப்பட்ட அறநெறிப்பாடசாலை களை இயங்க வைக்க திணைக்களம் அறிவித்துள்ளது. 

அதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். மொத்தத்தில் மக்களின் தேவைகளை உணர்ந்து நல்லாட்சி விழுமியங்களை பின்பற்றி அமைப்புக்கள் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

SHARE

Author: verified_user

0 Comments: