4 Aug 2020

பொதுத் தேர்தலை நடாத்த மட்டக்களப்பு மவட்டம் தயார் - பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

SHARE
பொதுத் தேர்தலை நடாத்த மட்டக்களப்பு மவட்டம் தயார் - பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப் பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.
இன்று புன்கிழமை 5 ஆம் திகதி நடைபெறுகின்ற பொதுத் தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு சுகாதார வழிமுறைகளுக்கமைய நேர்த்தியாக மேற்கொள்வாற்கு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு, வாக்களிப்பிற்காக வாக்குப்பெட்டிகள் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மற்றும், மட்டக்களப்பு மகாஜன கல்லூரியிலும் வைத்து நோற்று செவ்வாய்கிழமை காலை 8 மணி முதல் வாக்களிப்பு நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அனுப்பி வைக்கப்பட்டன.

சுகாhர நடைமுறைகளைக் கைக்கொண்டு தேர்தல், கடமைகளுக்குச் செல்வும், வாகனங்கள் அனைத்தும், கிருமிநாசினிகொண்டு தொற்று நீங்கப்பட்டு பலத்த சுகாதர நடைமுறைகளை கடைப்பிடித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  

இம் மாவட்டத்தில் உள்ள கல்குடா, பட்டிருப்பு, மட்டக்களப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் இருந்து 4 இலட்சத்தி 9 ஆயிரத்தி 808 வாக்காளர்கள் ஐந்து நாடாளுமன்றப் பிரதிநிகளைத் தெரிவு செய்வதற்காக வாக்களிக்கவுள்ளனர். இதற்காக 16 அரசியல் கட்சிகளையும், 22 சுயேச்சைக்குழுக்களையும் சேர்ந்த 304 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இந்நிலையில். இத்தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்ததில் 12 ஆயிரத்தி 815 வாக்காளர்களில் 97 சதவீதமானவர்களது அஞ்சல் வாக்குகள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இத்தேர்தலில் மட்டக்களப்புத் தொகுதியில் 194 வாக்கெடுப்பு நிலையங்களும், கல்குடா தொகுதியில் 119 வாக்கெடுப்பு நிலையங்களும், பட்டிருப்புத் தொகுதியில் 115 வாக்கெடுப்பு நிலையங்களுமாக மொத்தம் 428 வாக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்களிப்புக் கடமைகளுக்காக இம்முறை 4 ஆயிரத்தி 710 அரச உத்தியோகத்தர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இம்முறை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி வாக்கெண்ணும் பணிகளுக்காக பிரதான வாக்கெண்ணும் நிலையங்களாக கல்குடா மற்றும் பட்டிருப்புத் தொகுதிக்கென மட்டக்களப்பு இந்துக்கல்லூரியும், மட்டக்களப்புத் தொகுதிக்கென மகாஜனக் கல்லூரியும் செயற்படவுள்ளன. இதில் 34 வாக்கெண்ணும் மண்டபங்களும் இந்துக்கல்லூரியிலும், 33 வாக்கெண்ணும் மண்டபங்கள் மகாஜனக்கல்லூரியிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1417 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர்.

இதுதவிர இத்தேர்தல் கடமைகளுக்காக 307 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த அரச திணைக்கள வாகனங்கள் 159 உம், பிற மாவட்ட அரச வாகனங்கள் 54 உம் ஏனையவை வாடகைக்கு அமர்த்தப்பட்ட தனியார் வாகனங்களாகும்.

வாக்காளர்கள் தமது சுகாதார நலகன்கருதி வாக்களிக்கச் செல்லும்போது போனாக்களைக் கொண்டு செல்லுமாறும் கட்டயாம் முகக்கவசம் அணிந்து வருமாறும், வாக்குச் சாவடிக்குள் நுளையும்போதும், வாக்களித்து விட்டு வெளியேறும்போதும் தொற்று நீக்கித்திரவம் கொண்டு வாக்காளர் தமது கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்ளுமாறும், மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார். 

வாக்களிப்பு இடம்பெறவுள்ள 428 வாக்குச் சாவடிகளுக்குமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 57 நடமாடும் பொலிஸ் பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுவரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 269 தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகளும், பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.


















SHARE

Author: verified_user

0 Comments: