24 Aug 2020

பின்தங்கிய கிராமத்தில் தகரக் கொட்டகையில் வைத்து பகுதிநேரக் இலவசக் கல்வி கற்பிக்கும் பல்கலைக் கழக மாணவி – கதிரை மேசைகளாவது தந்துதவுமாறு உறுக்கமான வேண்டுகோள்.

SHARE

பின்தங்கிய கிராமத்தில் தகரக் கொட்டகையில் வைத்து பகுதிநேரக் இலவசக் கல்வி கற்பிக்கும் பல்கலைக் கழக மாணவி – கதிரை மேசைகளாவது தந்துதவுமாறு உறுக்கமான வேண்டுகோள்.

செல்வந்தர்கள் தமது சுக போக வாழ்வழ்வை மேற்கெண்டு தமது பிள்ளைகளை பல வசத்தி வாய்ப்புக்களுடன் கற்பித்து வரும்  தற்கால கல்வி யுகத்தில் பாடசாலைக் கல்வியை மாத்திரம் நம்பி பகுதி நேர வகுப்புக்கள் ஏதுமின்றி தமது வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் தமது சமூகத்தினை எவ்வாறாவது படிப்பித்து விடவேண்டும் என நினைத்துக் கொண்டு தகரக் கொட்டகை ஒன்று அமைத்து தன்னலாம் கருதாது பாடசாலை முடிந்து வந்தது அப்பகுதி சிறார்களை அந்த ஓலைக் கொட்டகைக்குள் வைத்து கற்பித்து வருகின்றார் மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர்பிரிவிற்குட்பட்ட கொடுவாமடு  சேவையாளர்பிரிவைச் சேர்ந்த யுவதி ஒருவர்.

தமது வறுமைப்பட்ட கிராமத்தில் பிறந்து வளர்ந்து கல்வி கற்று தான் தற்போது பல்கலைக் கழகத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு தமது பட்டப் படிப்பை மேற்கொண்டு வதாகவும், தான் ஆரம்பத்தில் கல்வி கற்பதற்காகப் பட்ட இன்னல்களையும், கஸ்ட்டங்களையும் தமது கிராமத்தைச் சேர்ந்த ஏனைய பிள்ளைகள் எதிர்கொள்ளக் கூடாது என நினைத்து யாரும் முன்வராத நிலையில் தனது சொந்ற முயற்சியினால் தமது வீட்டுக்கு அருகிலுள்ள காணி ஒன்றில் சிறியதொரு தகரக் கொட்டகை அமைந்து தமது கிராம பிள்ளைகளுக்கு தனது பல்கலைக் கழக கற்றல் நேரங்களை விட எனைய ரேரங்களில் கற்பித்து வருவதாக தெரிவிக்கின்றார் கொடுவாமது கிராமத்தைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக் கழக மாணவி கோணேஸ்வரன் மிதுசியா.

தனது முயற்சியினால் தற்போதைய கொழுத்தும் வெயிலுக்கு மத்தியில் தகரக் கொட்டகை அமைத்து, அதனுள் மணல் இட்டு அதற்குள் பாய் விரித்து பிள்ளைகளை வைத்து கற்பித்து வருகின்றேன் எனவே இந்த கொட்டகையை சற்றுப் பெரிதாக்கி பிள்ளைகள் இருக்கக்கூடிய மேசை கதிரைகள், ஏற்படுத்தித் தந்தால் ஏனை இப்பகுதியைச் சேர்ந்த ஏனைய பிள்ளைகளையும் அழைத்து நான் கற்பிப்பேன் என தமது ஆதங்கத்தைத் தெரிவிக்கின்றார் மிதுசியா.

தற்போது எமது சமூகம் மெல்ல மெல்ல கல்வியில் வளர்ச்சியடைந்து கொண்டு வருகின்றது ஆனால் அவர்களுக்குரிய அடிப்படைக் கல்வியை வழங்க வேண்டியது அவசியமாககும், ஆனாலும் எமது பகுதியில் அதிக பிள்ளைகள் இடைநடுவே பாடசாலைக் கல்வியை விட்டுவிடுவார்கள் இனிமேலும் அந்த நிலமை ஏற்படக்கூடாது என நினைத்து நான் ஆரம்பத்தில் மர நிழலில் வைத்துதான் பிள்ளைகளுக்கு கற்பித்தேன் தன்போது எனது சிறு முயற்சியின் காரணமாக சிறிய தகரக் கொட்டகை ஒன்று அமைதுள்ளேன். ஆனால் அதனுள் கதிரை, மேசை, என்பன இல்லாமலுள்ளன. என அவர் மேலும் தெரிவிக்கின்றார்.

எனவே கொடுவாமடு கிராமத்தில் தன்னலாம் கருதாது அப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உந்து சக்தியளிக்கும் மிதுசியாவின் முயற்சிகக்கும் அப்பகுதி மாணவர்களின் கல்வி வளர்ச்சியையும் கருத்திற் கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் குறித்த தகரக் கொட்டையை பெரிதாக்கி அதற்குரிய தளபாட வசதிகயையும் ஏற்படுத்திக் கொடுக்க முன்வர வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர் பார்கின்றனர். 








SHARE

Author: verified_user

0 Comments: