1 Aug 2020

தமிழ் மொழியையும் கலை கலாசார விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் - வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார்.

SHARE
தமிழ் மொழியையும் கலை கலாசார விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களியுங்கள் - வேட்பாளர் மாணிக்கம் உதயகுமார்.
ஒரு இனத்தின் மொழி அழிக்கப்படுமானால் அந்த இனமே அந்த நாட்டில் இருந்து அழிக்கப்பட்டுவிடும் ஒரு மரத்திற்கு ஆணிவேர் எவ்வளவு முக்கியமோ அதேபோன்றுதான் ஒரு இனத்திற்கும் அதன் மொழி முக்கியமாகின்றது. எனவேதான் எமது இனத்தினை இந்த நாட்டில் இருந்து முற்றாக அழித்துவிட வேண்டும் என கருதிய 1956 இல் ஆட்சியில் இருந்த சிங்கள பௌத்த பேரினவாத அரச தலைவரான பண்டாரநாயக்கா அவர்கள் தனிச் சிங்கள சட்டத்தினைக் கொண்டுவந்து 24 மணிநேரத்திற்குள் உள்ளேயே அதனை அமுல்படுத்தவும் விளைந்தபோது அதனை எதிர்த்த தமிழ் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் தாக்கப்பட்டார்கள் பின்பு தமிழர்களின் பலமான பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழும் ஆட்சிமொழியாக இந்த நாட்டில் அங்கிகரிக்கப்பட்டது இது வரலாறு.

என இந்தப் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் முன்னாள் அரசாங்க அதிபர்  மாணிக்கம் உதயகுமார். மட்டக்களப்பு நகர் பகுதியான கூழாவடியில் நேற்று (31) நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேலுள்ளவாறு தெரிவித்தார்.   



எனவே தற்போது ஆட்சிக்கு வந்துள்ள ஜனாதிபதியும் தற்போதுள்ள இந்த பேரினவாத அரசும் மீண்டும் எமது மொழியையும் எமது கலை கலாசார மிழுமியங்களையும் இந்த நாட்டில் இருந்து அழிப்பதற்கு முயற்சிப்பதனையும் நாம் அறிவோம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாரிய எதிர்ப்பினால் தனது இந்த இனவழிப்பு செயற்பாட்டினை செயற்படுத்த முடியாமல் திணறும் இந்த அரசு நடைபெற இருக்கின்ற இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை எப்படியாவது நலிவடையச் செய்து இதனூடாக தமிழ் மக்களுக்கான பலத்தினை அழித்துவிட வேண்டும் என நினைக்கின்றது இதனை தமிழ் மக்கள் புரிந்துகொண்டு செயற்பட வேண்டும் வேண்டும்.

கடந்த பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய ஒருவர் அற்ப சொற்ப சலுகைகளை அரசிடம் இருந்து பெறுவதற்காக அரச கட்சியில் சேர்ந்து தற்போது மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுகின்றார் இவர் தமிழ் இளைஞர்களை தன் பக்கம் இழுப்பதற்காக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மதுவுக்கு அடிமையாக்கி கறுப்பு உடை அணிவித்து தமது தமிழ்க் கலாசாரத்தினையே சீரழித்தவர்களாக அவர்களை மாற்றியுள்ளார். இந்தத் துரோகி இதுவும் ஒருவகையான இனவழிப்புத்தான்.

எனவே இவ்வாறான பாதகர்களுடன் தமது பிள்ளைகளை சேர விடாதீர்கள் காலப்போக்கில் இவ்வாறான இளைஞர்கள் ஒரு சமூக விரோ குழுவாக உருவாகி வடக்கில் உள்ள ஆவாக்குழு போன்று செற்படவும் இடமுண்டு இவ்வாறு நிகழ்வதற்கிடையில் தமது பிள்ளைகளை மீட்டுக்கொள்ளுங்கள் என மிகவும் வினயமாக வேண்டிக் கொள்;வதோடு நடைபெற இருக்கின்ற தேர்தலிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் மேலும் பலப்படுத்துவார்கள் இதனூடாக வடக்கு கிழக்கை ஆக்கிரமித்து தமிழ் மக்களை நசுக்க நினைக்கும் இந்த பேரினவாத அரசுக்கு தமிழ் மக்கள் இந்தத் தேர்தலின் மூலமாக தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள்.





SHARE

Author: verified_user

0 Comments: