10 Aug 2020

பிரதேச அரசியல்வாதியால் முடக்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் தங்கு தடையின்றித் தொடரும் - நஸீர் அஹமத்

SHARE

பிரதேச அரசியல்வாதியால் முடக்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் தங்கு தடையின்றித் தொடரும் ஏறாவூர் நவீன சந்தை கட்டிடத் தொகுதி வருட இறுதிக்குள் இயங்கத் தொடங்கும். மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத்.பிரதேச அரசியல்வாதியால் முடக்கப்பட்ட அத்தனை அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் தங்கு தடையின்றித் தொடரும் என உறுதியளித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமத் இவ்வருட இறுதிக்குள் ஏறாவூர் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதி இயங்கத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

தொடங்கப்பட்டு முடிவுறாமல் அரைகுறையாக காட்சியளிக்கின்ற ஏறாவூர் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியை சந்தை வியாபாரிகளின் அழைப்பின் பேரில் திங்கட்கிழமை 10.08.2020 நேரில் சென்று பார்வையிட்ட அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அங்கு சந்தை வியாபாரிகள் ஊர் நலன் விரும்பிகள் முன்னிலையில் மேலும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் அஹமத், எனது மாகாண சபை முதலமைச்சர் பதவிக் காலத்தில் முறைப்படியாக என்னால் ஆரம்பிக்கப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்களை மாகாண சபை கலைக்கப்பட்டதின் பின்னர் பிரதேச அரசியல்வாதி ஒருவரே வேண்டுமென்று தடைப்படுத்தினார்.

அதன் காரணமாகவே இந்த அரசியல்வாதியை இம்முறை மக்கள் நாடாளுமன்றப்படி ஏறவிடாமல் தடுத்துள்ளார்கள்.

அந்த வகையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் என்னால் வாக்குறுதி அளிக்கப்பட்ட அத்தனை அபிவிருத்தித் திட்டங்களும் எல்லா சமூக மக்களுக்கும் நன்மை கிட்டும் வண்ணம் தங்குதடையின்றி முன்னெடுக்கப்படும்.

ஏறாவூர் நவீன சந்தை சட்டப்படியான எல்லா நடைமுறைமைகளையும் பின்பற்றி மாகாண சபை மத்திய அரசாங்கம் ஆகியவற்றின் அனுமதியோடும் 193 மில்லியன் ரூபாய் நிதியோடும் அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் கட்டுமான வேலைகள் தொடக்கி வைக்கப்பட்டன.

ஆயினும் பிரதேச அரசயில்வாதி தனது வங்குறோத்து கையாலாகத்தன அரசியலைப் பயன்படுத்தி நாடாளுமன்ற கோப் குழுவுக்கு பொய்யான தகவல்களைச் சொல்லி இந்தப் பிரதேசத்தின் ஒட்டு மொத்த அபிவிருத்திகளையும் கேள்விக்குட்படுத்தினார்.

எனினும் அந்த அரசியில்வாதியின் பொய் கூற்றுக்கள் நாடாளுமன்ற பொதுக் கணக்குகள் குழுவினால் நிராகரிக்கப்பட்டது ஒரு புறமிருக்க அந்த பொய் அரசியல்வாதியை இப்பொழுது மக்களும் நிராகரித்து விட்டனர்.

அதன் பெறுபேறாக இப்பிரதேச அபிவிருத்திகள் தங்கு தடையின்றி இனித் தொடரும்.

தொழினுட்ப வளாகம், கிழக்குமாகாண மக்களுக்கான நவீன வைத்தியசாலை, கைத்தொழில் பேட்டைகள், நவீன சர்வதேச ஆடைத் தொழிற்சாலைகள் என்பன அடுத்த ஆண்டுக்குள் அமைக்கப்படும். அதன்மூலம் பல ஆயிரக் கணக்கான இளைஞர் யுவதிகள் நிபுணத்துவ தொழில் வாய்ப்பைப் பெறுவர்” என்றார்.









SHARE

Author: verified_user

0 Comments: