6 Aug 2020

மட்டக்களப்பு பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டன.

SHARE

பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான மட்டக்களப்பு மாவட்ட உத்தியோகபூர்வ முடிவுகளை தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்க அதிபருமாகிய திருமதி. கலாமதி பத்மராஜா இன்று (06) மாலை தகவல் திணைக்கள மாவட்ட ஊடகப் பிரிவுக்கு தகவல் தெரிவித்தார்.மட்டக்களப்பு பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2020 இற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியிடப்பட்டன.

இம்மாவட்டத்தில் அளிக்கப்பட்ட 3 இலட்சத்தி இரண்டாயிரத்தி 337 வாக்குகளில் பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் திணைக்கள ஆணைக்குழுவின் அனுமதியுடன் அவை தெரிவத்தாட்சி அலுவலரினால் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைவாக மாவட்டத்தின் மூன்று தொகுதிகளிலுமாக 67 வாக்கெண்ணும் நிலையங்களில் முடிவகளுக்கமைவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 79 ஆயிரத்தி 460  வாக்குகளையும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி 67 ஆயிரத்தி 692 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34 ஆயிரத்தி  428 வாக்குகளையும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 33ஆயிரத்தி 424 வாக்குகளையும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 31054, ஐக்கிய மக்கள் சக்தி 28362 வாக்குகளையும், தமிழர் விடுதலைக் கூட்டணி 8113 வாக்குகளையும், தமிழ் மக்கள் தேசிய விடுதலைக் கூட்டணி 4960 வாக்குகளையும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1203 வாக்குகளையும், 22 சுயேட்சைக் குழுக்கள் 1303 வாக்குகளையும் பெற்றுக் கொண்டுள்ளன. 
















SHARE

Author: verified_user

0 Comments: