24 Jul 2020

தீர்வைப் பெற செய்ய எஞ்சியுள்ள பயணம் இன்னும் சிறிது துாரமே எனவேவ உற்சாகத்துடன் செயற்பட வேண்டும்

SHARE
தீர்வைப் பெற செய்ய எஞ்சியுள்ள பயணம் இன்னும் சிறிது துாரமே எனவேவ உற்சாகத்துடன் செயற்பட வேண்டும்.
70 ஆண்டு காலம் ஆயுதப் போராட்டம் மற்றும் அறவழிப் போராட்டம் என்று பயணித்த தமிழ் மக்களுடைய போராட்டம் நிறைவடைந்து எமது அதிகாரப் பகிர்வை அடைய இன்னும் சிறிது தூரம் பயணிப்பதே எஞ்சியுள்ளது. இந்த நிலையில் நாம் மிக உற்சாகமாக எமது பயணத்தை முன்னெடுக்க அனைவரும் ஓற்றுமையுடன் அதே வழியில் தொடர்ந்து  பயணிக்க வேண்டும். என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும் த.தே.கூ திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். 

நேற்று வெருகல்  பிரதேச பூநகர் வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் உரையாற்றும் போது
 தேர்தல் தொடர்பாக சில புள்ளி விபரங்களை உங்களுடன் பேசலாம் என்று எண்ணுகின்றேன் என்றார். திருகோணமலை மாவட்டத்தில் 288000 வாக்காளர்கள் உள்ளார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தலில் 233000 பேர் வாக்களித்துள்ளார்கள். இந்த தேர்தலிலும் எந்த அளவானோர் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.அவ்வாறு வாக்களித்தால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைப் பெறுவதற்கு 58000 பேர் வாக்களிக்க வேண்டும் எனவே தமிழ் மக்களாகிய நாம் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் 98000 தமிழ் வாக்காளர்கள் இருக்கின்றார்கள்.
 தமிழ் வாக்காளர்களில் 65000 வாக்காளர்கள் ஒற்றுமையாக தமிழ் தேசியக் கூட்டமைக்கு வாக்களிப்பார்களே ஆனால் 2 பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற முடியும்.

நாங்கள் அனைவரும் சிறு சிறு கட்சிகளுக்கு வாக்களித்து வாக்குகளை வீணடிக்க வேண்டாம். உதாரணமாக சைக்கில் சின்னத்தல் போட்டியிடும் அகில இலங்கை தமிழ் காங்கிரசை பார்த்தால்  கடந்த தேர்தல் திருகோணமலை மாவட்டம் முழுவதும் 1460 வாக்குகளைப் பெற்றுள்ளது.வீணை சின்னத்தில் போட்டியிடும் ஈ.பி.டிபி கட்சி தென்னமரவாடி முதல் வெருகல் வரை இந்த மாவட்ட முழுவதும் 581 வாக்குகளை மட்டுமே  பெற்றுள்ளது. ஆவர்களால் 58000 வாக்குகளை பெற்று வெற்றி பெற முடியுமா?

ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 46000 வாக்குகளைப் பெற்றுள்ளது. எனவே இன்னும் 10000 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெறுவது சுலபம். மேலும் மொத்த வாக்கில் 5 வீதத்திற்கு குறைவாக பெறுகின்ற கட்சிகளின் வாக்குகள் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது. அவை குப்பை தொட்டியிலே இறுதியில் சென்றடையும் எனவே இவ்வாறான சிறிய கட்சிகளுக்கும் வெற்றி பெற முடியாத கட்சிகளுக்கும் வாக்களித்து உங்களுடைய பெறுமதியான 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கின்ற வாக்குப் பலத்தை வீணடித்து விடாதீர்கள்.

தமிழ் மக்களுடைய உரிமைக்காக நீண்ட ஒரு பயணத்தை கடந்து வந்தள்ள த.தே.கூட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலம் எமது போராட்டத்திற்கான விடிவினை நாம் எட்ட முடியும். என  இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட தலைவரும் த.தே.கூ திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: