28 Jul 2020

எழுபது வருடங்களுக்கும் மேலாக போலி வாக்குறுதிகளைத் தேர்தல் காலங்களில் வழங்கித் தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடி வருகின்றனர் - தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் (தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு)

SHARE
எழுபது வருடங்களுக்கும் மேலாக போலி வாக்குறுதிகளைத் தேர்தல் காலங்களில் வழங்கித் தமிழ் மக்களின் வாக்குகளை வேட்டையாடி  வருகின்றனர் - தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் (தலைவர், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு)
கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக நடைமுறைச் சாத்தியமற்ற போலி வாக்குறுதிகளைத் தேர்தல் காலங்களில் அள்ளி வழங்கித் தமிழ் மக்களின் வாக்குகளை வஞ்சகமாக வேட்டையாடிய தமிழரசுக் கட்சியும் அதன் தற்போதைய வடிவமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வழமைபோல் இம்முறையும் தமிழ் மக்களை ஏமாற்றலாம் என்றெண்ணிப் பழைய பல்லவிகளையே மீண்டும் இப்போது பாடத் தொடங்கி உள்ளனர். இதுகாலவரையும் தமிழ்த் தலைவர்கள் என்று நாம் நம்பியவர்கள் இனியும் திருந்தப் போவதில்லை. அவர்களைத் திருத்தவும் முடியாது. மக்கள்தான் மனம் திருந்த வேண்டும்.

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் தலைவர் தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் செவ்வாய்கிழமை(28) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தவறுகளைச் சுட்டிக் காட்டி


விமர்சிப்பவர்களையும் மாற்று அரசியல் சிந்தனையாளர்களையும் கிழக்கு மண்ணையும் கிழக்கு மக்களையும் நேசித்துக் கிழக்கிற்கான தனித்துவமான அரசியல் அணுகு முறைகளையிட்டு அறிவுபூர்வமாகச் செயற்படுபவர்களையும் நேர்மையாக எதிர்கொள்ளும் தார்மீக வல்லமையற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அத்தகைய நல்லெண்ணம் கொண்ட அரசியற் செயற்பாட்டாளர்களை ஒட்டுண்ணி,

தமிழ்த்தேசியத் துரோகி, மற்றும் பிரதேசவாதி, கைக்கூலி போன்ற வார்த்தைப் பிரயோகங்களால் வசைபாடத் தொடங்கியுள்ளனர். மாற்றத்தை வேண்டி நிற்கும் கிழக்குத் தமிழர்கள் அரசியல் விழிப்புணர்வுடன் செயலாற்ற வேண்டிய தருணம் இது. தேர்தலுக்குத் தேர்தல் சர்வதேச

போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனவர்கள் விவகாரம், புதிய அரசியலமைப்பு போன்ற ஏதாவது தேர்தல் துரும்புகளை எடுத்துக் கொண்டுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்

அவற்றில் தோற்றுப் போனதாலும் இம்முறை கையில் எடுப்பதற்குப் புதிய துரும்புகள் கிடைக்காததாலும் பழைய பல்லவிகளைத் தூசி தடட்டியெடுத்து மீண்டும் பாடத் தொடங்கியுள்ளனர். தேர்தல் தினம் நெருங்கி வரும் போது அவர்கள் புதிய துரும்புகளைத் தேடிப்பிடிக்கவும் கூடும். கிழக்குத் தமிழர்கள் மீண்டுமொருமுறை தமிழ்த்தேசியக்
கூட்டமைப்பை நம்பி ஏமாந்துவிட வேண்டாம்.

 கிழக்கு மாகாணத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே போட்டியிடும் படகுச் சின்னமும் திகாமடுல்லை (அம்பாறை) மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் போட்டியிடும் கப்பல் சின்னமும் வென்றுவிடக்கூடாது என்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்வேட்பாளர்களுக்கு முஸ்லிம் அரசியல் வாதிகளும் முஸ்லிம் வர்த்தகர்களும் நிதியுதவி அளிப்பதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

இரண்டாயிரமாம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் திகாமடுல்லை (அம்பாரை) தேர்தல் மாவட்டத்தில் அப்போது செயலாளர் நாயகமாக இரா.சம்பந்தன் விளங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி

சமர்ப்பித்திருந்த வேட்புமனு, மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நிராகரிக்கப்பட்டதால் ஆத்திரமுற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி, தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்களும் போகட்டும் என்ற மனப்பான்மையில் இப்பத்தி எழுத்தாளரின்

தலைமையில் சுயேச்சை குழுவாகப் போட்டியிட்ட அம்பாறை மாவட்டத் தமிழர் மகா சங்கத்தைத் தோற்கடித்து அம்பாறை மாவட்டத்தமிழர்களுக்குரிய ஒரே ஒரு பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தையும் இழக்கச் செய்வதற்காகத் தமிழர்களை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்கும்படி கோரியதையும் அப்போது தமிழர் விடுதலைக்

கூட்டணித் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அபாராளுமன்ற உறுப்பினர் அமரர் ந.ரவிராஜ் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில்

போட்டியிட்ட நிந்தவூரைச் சேர்ந்த முஸ்லிமான சட்டத்தரணி அப்பாஸ்அவர்களுக்குத் தமிழர்களை வாக்களிக்கக் கோரும் விளம்பரம் ஒன்றினைத்தனது பெயரிலேயே வீரகேசரிப் பத்திரிகையில் வெளிவரச் செய்திருந்தார்

என்பதையும் இத்தருணத்தில் பதிவு செய்தல் பொருத்தமாகும்.கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலே போட்டியிடும் படகுச்சின்னமும் திகாமடுல்லை (அம்பாறை) மற்றும் திருகோணமலைமாவட்டங்களில் போட்டியிடும் கப்பல்; சின்னமும் வென்றுவிடக்கூடாது என்பதற்காகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு

முஸ்லிம் அரசியல்வாதிகளும் முஸ்லிம் வர்த்தகர்களும் நிதியுதவி வழங்குவதாக கதைகள் அடிபடுகின்றன.

 மட்டக்களப்பிலே பிள்ளையானும் அம்பாறையிலே கருணாஅம்மானும் திருகோணமலையிலே கலாநிதி விக்னேஸ்வரன் அவர்களும் வென்றுவிடக்கூடாது என்பதில் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் திரைமறைவில் கைகோர்த்துச் செயற்படுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. கிழக்குத் தமிழர்

கூட்டமைப்பு போன்ற கிழக்குத் தமிழர்களுக்கான தனித்துவமான அரசியல் சக்தி அரசியல் அரங்கிலே மேற்கிளம்பி வருவதில் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இஷ்டமில்லை. கிழக்குத் தமிழர்களிடையே தமிழ்த்

தேசியக் கூட்டமைப்பு செல்வாக்குப் பெற்று இருப்பதையே முஸ்லிம் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர். அப்போதுதான் முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழர்களுக்கு எதிரான தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரலைத் தடையின்றிக் கொண்டு செல்லலாம் என்பதே அதற்குக் காரணம்.

எனவே எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் கிழக்குத் தமிழர்கள் மிகவும் விழிப்பாக இருந்து செயற்பட்டு கிழக்குத் தமிழர்களைக் காப்பாற்ற கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு வகுத்துள்ள அரசியல் வியூகத்தை

வெற்றியடையச் செய்ய வேண்டும். ஆம்! அம்பாரை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் கப்பல்; சின்னத்தையும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் படகு

சின்த்தையும் திருகோணமலை மாவட்டத்தில் அகில இலங்கை தமிழர் மகாசபையின் கப்பல் சின்னத்தையும் வெற்றியீட்டச் செய்ய வேண்டும். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 Comments: