1 Jul 2020

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டு மாவட்ட முதன்மை வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி.

SHARE
(இ.சுதா)

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் மட்டு மாவட்ட முதன்மை வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு ஒற்றை ஆட்சிமுறையில் தீர்வு காண முடியாது சமஷ்ஷி முறையில் மாத்திரமே தீர்வினைப் பெற முடியும் இதைத்தான் தந்தை செல்வா முன்னர் கேட்டார். அதனை கொடுப்பதற்கு சிங்கள பேரினவாத கட்சிகளும் பௌத்த துறவிகளும் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கக் கூடாது என முழுமையான எதிர்ப்பினை தெரிவித்தது மாத்திரமல்லாது பண்டா செல்வா ஒப்பந்தமானது கிழித்து வீசுவதற்கும் உந்து சக்தியாகச் செயற்பட்டனர். இது வரலாற்று உண்மை நிகழ்வாகும்.

இவ்வாறு துறைநீலாவணையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் பிரதி அமைச்சரும் தற்போதைய மட்டு மாவட்ட தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளருமான சோமசுந்தரம் கணேசமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனைகள் இன்றி  ஆதரிக்க முஸ்லிம் காங்கிரஸ் கரையோர பிரதேசம், ஒலுவில் துறைமுக அபிவிருத்தி ,முக்கிய அமைச்சுக்களை வழங்க வேண்டும் என பேரம் பேசி அபிவிருத்தியினை ஏற்படுத்த தமிழர் பிரதி நிதிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களையும் பிரதேசத்தினையும் கீழ்மட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து உறுப்பினர்அந்தஸ்துடன் சிரேஸ்ட தலைவராகி வடமாகாண சபையின் முதலமைச்சராக மக்கள் சேவையாற்றும் வரைக்கும் வாய் திறந்து எதனையும் பேசாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது விக்கினேஸ்வரன் ஐயாவை துரோகி என்கின்றனர்.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய அரசியல் நடவடிக்கை பிழை என உணர்ந்த காரணத்தினால் தமிழர்களுக்கு மாற்று கட்சி ஒன்றினை உருவாக்கினார்.அதில் பங்காளிக் கட்சிதான் இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி இதில் எதுவித  மாற்றுக் கருத்துக்களும் இடமில்லை விக்னேஸ்வரன் என்பவர் உயர்நீதி மன்ற நீதியரசராகப் பதவி வகித்தவர் அவருக்கு முழுமையான சட்டம் தெரியும்.அவர் கூறியது வடகிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பு  இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் முன்னெடுக்கப்பட்ட யுத்த மீறல்களும் அவற்றிக்கான நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டனை பெற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். என இந்தியாவின் உதவியோடு அணுகுவது குற்றமா இல்லை நீதிக்காக போராடுகின்றவரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தூற்றுகிறது. 

அமெரிக்காவினால் ஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட யுத்த மீறல்கள் தொடர்பான பிரேரணையினைக்கு பல ஐரோப்பிய நாடுகள் பூரண ஆதரவினை வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டில் இருந்தன நீதி இதுவரைக்கும் கிடைக்க வில்லை இலங்கையில் கிழக்கில் பலர் கடத்தப்பட்டனர் அவர்களுக்கு என்ன நடந்தது என இது வரைக்கும் தெரியாது .இது அடிப்படை மனித உரிமை மீறல் நீதி கிடைக்க வில்லை இதனை செய்தவர்கள் யார் தெரியுமா மறைக்கப்பட்டிருக்கின்றது.

70 வருட போராட்டத்தினால் கிடைத்தது ஒன்றுமே இல்லை அரசினால் கொண்டுவரப்பட்ட 19 ஆவது மற்றும் 13ம் சரத்தின் படி  மாகாண முறை அதிகாரம் அற்றது.13 ஆவது சரத்தின் படி ஜனாதிபதியினால் நியமிக்கப்படுகின்ற ஆளுநருக்கே அனைத்துப் பொறுப்புக்களும் வழங்கப்பட்டிருக்கின்றன.ஆளுநர் ஆலோசனைக்கு அமைவாகவே மாகாணத்தில் சகல உயர் அதிகாரிகள் நியமனங்களும் வழங்கப்படும்.

2000ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொண்டு வரப்பட்ட அரசியல் சட்ட வரைவினை வரைந்தவர்கள் இரு தமிழரும் ,ஒரு சிங்களவருமே இதில் காணி மற்றும் கல்வி அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன.சட்டத்துறை அதிகாரங்கள் தெளிவு படுத்தப்பட்டிருந்தன.இதனை சந்திரிக்கா அம்மையார் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த வேளை விவாதத்தில் கலந்து கொண்டு காத்திரமான உரை நிகழ்த்தியவன் நான் ஆனால் புரையோடிப் போயுள்ள தமிழ் பிரச்சினைக்கு தீர்வு வழங்காது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் பௌத்த துறவிகள்  வீதிகளில் சத்தியாக்கிரக போராட்டங்களை நடாத்தி ஆனால் அரசியல் வரைவு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டவுடன் தீயிடப்பட்டது.தீயிடப்பட்டது தமிழ் மக்களின் அபிலாஷைகள் மக்கள் சிந்திக்க வேண்டும்.30 வருட கால இன விடுதலைப் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்க வில்லை 1983 இற்கு முன்னர்  இருந்த நிலையினை ஏற்படுத்துங்கள் என விக்னேஸ்வரன் ஐயா அரசாங்கத்திடம் வழியுறுத்தி வருகின்றார்.

யதார்த்தமாக சிந்தியுங்கள் கிழக்கினை வடக்கிலிருந்து பிரிக்க முடியாது சேர்ந்த வகையில் மாத்திரமே தீர்வு சாத்தியம் .வடக்கில் மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி விக்கி ஐயாவுடன் அணி திரண்டிருக்கின்றனர். கிழக்கு மாகாணத்திலும் மாற்றம் உருவாகவேண்டும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்திருக்கின்றேன். குறிப்பாக இசை நடனக் கல்லூரிக்கு பல்கலைக்கழக அந்தஸ்து வழங்கியமை, திருகோணமலையில் கிழக்குப்பல்கலைக்கழ வளாகத்தினை நிறுவியமை. தாழங்குடாவில் கல்விக்கல்லூரியினை நிறுவியமை போன்ற பல சேவையினை கல்விக்காக பிரதி அமைச்சராக இருந்த போது செய்திருக்கின்றேன்.

எதிர்வரும் காலங்களிலும் பல பணியினை முன்னெடுப்பேன். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் இணைந்து மாவட்ட அபிவிருத்திக்கு முழுமையாகச் செயற்படுவேன்.வெற்றி உறுதி இதில் துறைநீலாவணை பங்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். நான் மக்களுக்காக முழுமையாக அர்ப்பணித்த அரசியல்வாதி உரிமையுடன் கூடியஅபிவிருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டிய கடமைப்பாடு தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.


SHARE

Author: verified_user

0 Comments: