6 Jul 2020

வேத்துச்சேனையில் தொல்பொருள் என அடையாளம் காணப்படும் காணிக்குள் பிரவேசிக்க நீதிமன்னறம் தடை உத்தரவு - இரா.சாணக்கியன்.

SHARE
வேத்துச்சேனையில் தொல்பொருள் என அடையாளம் காணப்படும் காணிக்குள் பிரவேசிக்க நீதிமன்னறம் தடை உத்தரவு - இரா.சாணக்கியன்.
ஞாயிற்றுக் கிழமை (05) மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட வேத்துச்சேனைக் கிராமத்தில் ஒரு பதட்ட நிலமை காணப்பட்டிருந்தது. இது இவ்வாறு இருக்க திங்கட்கிழமை (06) காலையில் வெல்லாவெளி பொலிசாரால் என்னை குறித்த வேத்துச்சேனைக் கிராமத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலப்பகுதிக்குச் செல்ல முடியாது என நீதிமன்றத் தடை உத்தரவு ஒன்றைத் தந்துள்ளனர். என சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளரும் தமிழ் தேசியக் கூட்டமைபின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். இவ்விடையம் குறித்து களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள அவரது காரிhலயத்தில் திங்கட்கிழமை (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

வேத்துச்சேனையில் அமைந்துள்ள வைரவர் ஆலயம், மற்றும் அதிலுள்ள தனியார் காணி, ஆகியன தொல்பொருட் திணைக்களத்திற்குச் சொந்தமானது அதில் எவரும் போகக்கூடாது,  அதில் பொதுமக்கள் எவராவது சென்றால் அதற்கு நான் உட்பட மேலும் 14 பேர் பொறுப்பாளிகளாவர்,  என நீதிமன்றம் திங்கட்கிழமை எமக்கு அறிவித்துள்ளது. இவ்விடையத்தில் வெல்லாவெளி பொலிஸ் நிலையப் பெறுப்பதிகாரி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவம் அரசியல் ரீதியாக இடம்பெற்ற ஒரு நிகழ்வல்ல. மக்கள் அவர்களது ஆலயத்தை துப்பரவு செய்து அதில் பூஜை நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். அவ்விடத்திற்கு ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் சிலர் வந்ததனால்தான் மக்கள் மத்தியில் எதிர்ப்பலை உருவாகியது.  இதன்போது அவ்விடத்தில் சிலர் பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுவதாக மக்கள் சிலர் மீது குற்றம் சுமத்தியிருந்தார்கள். அது முற்றிறும் உண்மைதான். 

அரசாங்கம் உருவாக்கிய தொல்பொருள் ஆய்வு செய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு,  தொடர்பான அதிருப்திகளையும், இவ்வாறான செயற்பாடுகளைத் தடுத்து நிறுத்துவதற்கும் அரசாங்க கட்சியில் இருப்பவர்கள் மக்களோடு இருந்து கொண்டு கோசம்போட வேண்டியதில்லை. அவர்கள் அவர்களது அசாங்கத்திடம் தெரிவித்து இதற்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியும். ஞாயிற்றுக்கிழமை ஏனைய அரசியல்வாதிகளை எதிர்த்தது அரசியல் ரீதியாக மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற எதிர்ப்பலையாகும். அது வேத்துச்சேனையில் இருக்கின்ற எதிர்ப்பலை மாத்திரமல்லை. எனவே ஏனைய அரசியல்வாதிகள் நடிக்கும் நாடகத்தை மக்கள் நன்கு புரிந்துள்ளார்கள். 

சிலர் என்னைப்பற்றி விமர்சிக்கின்றார்கள். நான் யாரையும் கொலை செய்வோ, களவு செய்வோ, கற்பழிக்கவே இல்லை. என்னைப்பற்றி விமர்சிப்பதொன்றால் எனது கடந்த கால அரசியலைப் பற்றித்தான் விமர்கிக்கலாம் அது மக்களுக்குத் தெரியும். அது எனக்கு இன்னும் பலமாக அமையும். 

இந்நிலையில்தான் தொல்பொருட்களைப் பாதுகாக்கதற்காக அமைக்கப்பட்டுள் ஜனபதிபதி செயலணியின் செயற்பாடு திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குகின்ற நடவடிக்கையாகும். கல்லேயா எதிர்ப்பு போராட்டம், ஸ்ரீ எதிர்ப்பு போராட்டம் போன்றதொரு காலகட்டத்திற்குள்த்தான் நாங்கள் தற்போது தள்ளப்பட்டுள்ளோம். மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்காமல் விட்டால் மங்களகம, கெவுளியாமடு கிராமங்களைப்போல் நமது பிரதேசங்களும் சென்றுவிடும். இந்த செயலணியில் தமிழ் பேசும் பிரதிநிதிகள் எவரும் இல்லை. இவ்வாறுதான் நிலமை உள்ளது. 

எனவே இவ்வாறான முக்கியமான தொல்பொருட்கள் விடையங்கள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழக்குகளைப் பதிவு செய்யவுள்ளது. அது தொடர்பில் எமது நடவடிக்கைகளை முன்நெடுத்துள்ளோம். தற்போது கிடைத்துள்ள நீதிமன்ற தடை உத்தரவுகூட எனது வெற்றியைத் தடுப்பதற்கான செயற்பாடாகத்தான் இதனை நான் பார்க்கின்றேன். இதனை மக்கள் நன்கு உணர்ந்து கொள்வார்கள். மக்கள் போலி அரசியல்வாதிகளை தொடர்ந்து மக்கள் விரட்டியடிக்க வேண்டும். என அவர் இதன்போது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: