22 Jul 2020

நல்லாட்சி என்ற நாமத்தோடு வந்தவர்கள் சிறுபான்மையினருக்கு பொல்லாப்பாக இருந்து விட்டுச் சென்றார்கள். சிறுபான்மையினருக்கு எதுவுமே செய்யாதவர்கள் கடந்த ஆட்சிக் காரர்கள். கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்.

SHARE
நல்லாட்சி என்ற நாமத்தோடு வந்தவர்கள் சிறுபான்மையினருக்கு  பொல்லாப்பாக இருந்து விட்டுச் சென்றார்கள். சிறுபான்மையினருக்கு எதுவுமே செய்யாதவர்கள் கடந்த ஆட்சிக் காரர்கள். கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் அஹமட்.
நல்லாட்சி என்ற நாமத்தோடு வந்தவர்கள் சிறுபான்மையினருக்கு  பொல்லாப்பாக இருந்து விட்டுச் சென்றார்கள் என கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

ஏறாவூரில் செவ்வாய்க்கிழமை 21.07.2020 இடம்பெற்ற கடந்த கால அப்pவிருத்திச் சேவைகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் அவர் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.

முன்னாள் முதலமைச்சரின் வாளகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து உரைiயாற்றிய அவர்,

நாட்டில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய நல்லாட்சி அரசாங்கம் நல்லாட்சி செய்யாமல் நழுவிக் கொண்டிருக்க நாட்டுககும் முழு உலகுக்கும் முன்னுதாரணமாய் நல்லாட்சியை நடத்திக் காட்டியவர்கள் நாங்கள். இந்த விடயம் இப்பொழுதும் சிலாகித்துப் பேசப்படுகிறது.

மத்திய அரசின் நல்லாட்சியிலே பல ஊழல்கள் நடந்த வரலாற்றை எல்லோரும் அறிவோம். ஆனால், எல்லா இனங்களும் இணைந்து ஆட்சி நடத்திய எங்களது கிழக்கு மாகாணசபை நல்லாட்சியிலே ஒரு முள்ளுக் கொப்பு கூட முறியவில்லை. ஊழலும் இடம்பெறவில்லை. மாறாக இன ஐக்கியமே மேலோங்கியிருந்தது. அபிவிருத்தி அபாரமாக இடம்பெற்றது.

மத்திய அரசின் நல்லாட்சியிலேதான் சிறுபான்மையினரின் உரிமைகள் வெளிப்படையாக மறுக்கப்பட்டன.

எல்லாவற்றையும் செய்வோம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த நல்லாட்சியினர் சிறுபான்மையினருக்கு எதையுமே செய்யாமல் அவர்களுடைய ஆட்சி முடிவுக்கு வந்த வரலாறு நமக்குத் தெரியும்.

குறிப்பாக முஸ்லிம் சமூகத்துக்கு கடந்த நல்லாட்சி அரசில் பாரிய வரலாற்றுத் துரோகம் இடம்பெற்றது. நாடாளுமன்றத்தில் இருந்த முஸ்லிம் உறுப்பினர்களின் கண்கள் கட்டப்படே நல்லாட்சியில் முஸ்லிம்களின் உரிமைகள் நசுக்கப்பட்டன.

மாகாண சபையில் பெண்களை உள்வாங்குதல்; என்ற சட்ட மசோதாவுடன் சேர்த்து தேர்தல் திருத்த சட்டம் என்ற ஒன்றுக்குள்ளெ முஸ்லிம்களின் உரிமைகளை நசுசு;கும் தந்திரோபாய சட்ட மூலத்தை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ கொண்டு வந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கண்களைக் கட்டி அந்த சட்ட மூலத்தை நிறைவேற்றினார்.

எனது தலைமையிலான மாகாண சபை நல்லாட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட கையோட கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு அபிவிருத்தியும் இடம்பெறாதது ஒருபுறமிருக்க ஏற்கெனவே எனது தலைமையில் கிழக்கு மாகாண சபையால் ஆரம்பித்து வைத்த திட்டங்களும் முடிக்கப்படாமல் ஆளுநர்களால் புறக்கணிக்கப்பட்டு வருவது கவலைக்குரிய விடயமாகும்.

மாகாண சபையின் அதிகாரத்தை முழு உலகுக்குனும் முன்னுதாரணமாதக நடத்த்pக் காட்டி பல்லின் மக்களுக்கும் இன மத மொழி பேதமின்றி தூய்மையான நல்லாட்சியை நடத்திக் காட்டியதில் நான் வெற்றியடைந்தேன் அதனால்தான் என்னை எவரும் எதிர்க்கவில்லை. இனி;யும் எதிர்க்கப் போவதுமில்லை.

கிட்டத்தட்;ட எனது இரணை;டரை வருட கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற நல்லாட்சியிலே தினமும் பல பாடசாலைகளைப் புதிய கட்டிட வசதிகயேளாடு அமைப்பதற்காக அடிக்கல் நாட்டியிருக்கின்றோம். அவற்றில் பல பாடசாலைகள் எனது ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஆயினும் இன்னும் பல பாடசாலைகள் முடிவுறாத நிலையிலுள்ளன.

இந்த நிலையில் நாடாளுமன்ற அரசியல் அதிகாரம்  எனக்குக் கிடைக்குமாயின் நாட்டின் அரசியல் அதிகாரத்தை அனைத்து மக்களுக்குமான அபி;விருத்திப் பணிகளுக்குமாக அர்ப்பணிப்புடன் பயன்படுத்தவேன்.” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: