24 Jul 2020

எதிரணியினரின் போலியான பிரட்சாரங்களை நம்பி தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது - கூட்டமைப்பு வேட்பாளர் உதயகுமார்.

SHARE
எதிரணியினரின் போலியான பிரட்சாரங்களை நம்பி தமிழ் மக்கள் ஏமாறக்கூடாது - கூட்டமைப்பு வேட்பாளர் உதயகுமார்.
தேர்தலில் தாங்கள் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் கீழ் போட்டியிடுகின்ற எனக்கும் எதிராக பல போலியான குற்றச் சாட்டுகளை எதிரணியினர் தேர்தல் பரப்புரையின்போது கூறி வருகின்றனர் அவ்வாறு கூறுவதனை விடுத்து தங்களிடம் ஆதாரங்கள் இருந்தால் அவற்றினை பொது மக்களின் பார்வைக்காக வெளியிடலாம் அல்லது எனக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம் அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (24) களுதாவளையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரையின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் அங்கு கூறியதாவது…
பொதுவாகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுகின்ற சிங்கள பேரினவாத அரசின் அல்லது கட்சியின் அருவருடிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராகவே கருத்துக்களை வெளியிடுவது வழமை இப்போது தேர்தல் காலம் வந்தால் இன்னுமொரு படி மேல் சென்று கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கு எதிராகவும் போலியான பல குற்றச் சாட்டுகளை கூறுவது வழமையான விடயம்தான் இருந்தும் இம்முறை நான் தேர்தலில் போட்டியிடுவதால் நான் அரசாங்க அதிபராக கடமையாற்றியபோது தமிழ் மக்களுக்கு எதிராக செயல்பட்டு பல அபிவிருத்தித் திட்டங்களை நிறுத்தி பணத்தினை திருப்பி அனுப்பியதாக போலியான பல குற்றச்சாட்டுகளை தேர்தல் பரப்புரைகளின்போது கூறி வருகின்றார்கள்.

மொட்டு கட்சியில் போட்டியிடுகின்ற களுதாவளையைச் சேர்ந்தவர் தன்னை  இப்பவே ஒரு அமைச்சராக நினைத்துக் கொண்டு அவர் ஒருவர் சில தினங்களுக்கு முன் இங்கு வைத்து கூறுகின்றபேது நான் வீட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபாவினை திருப்பி அனுப்பியதாக போலியான ஒரு குற்றச்சாட்டியினை தெரிவித்துள்ளார்.

அவர் உண்மையிலேயே தமிழ் மக்களுக்கு சேவை செய்பவராயின் குறித்த குற்றச் சாட்டுக்கான ஆதாரங்களையும் அதன்போது வெளியிட வேண்டும் அவரிடம் ஆவணங்கள் இல்லையாயின் தகவல் அறியும் சட்டத்தின் மூலமாக குறித்த திணைக்களத்தில் இருந்து அல்லது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையில் இருந்து ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம் இதனை விடுத்து தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்பதற்காக போலியான குற்றச்சாட்டுகளைக் கூறி தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

வெளிநாட்டுக்கு ஆட்கடத்தல் செய்து பணம் சம்பாதித்தவர் அரசியல் நாகரீகம் தெரியாமல் தற்போது அரசியல் ஊடாக சம்பாதிக்கப் பார்க்கிறார். இப்படிப் பட்டவர்களிடத்தில் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

எனவே அன்பான தமிழ் மக்களே பேரினவாத கட்சிகளின் போலியான பிரட்சாரங்களை நம்பி ஏமாறாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து கூட்டமைப்பினை ஆமோக வெற்றிபெறச் செய்வது உங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும் என அவர் மேலும் தெரிவித்தார். 




SHARE

Author: verified_user

0 Comments: