11 Jul 2020

மூதாய சார் புனர்வாழ்வு இன்று அவசியமானது-கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர்

SHARE
(ராஜ்) 

மூதாய சார் புனர்வாழ்வு இன்று அவசியமானது-கிழக்கு மாகாண சமூக சேவைகள் பணிப்பாளர்.நவஜீவன நிறுவனத்தின் நிறுவனத்தால் கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 06 மாவட்டங்களில் முன்னெடுத்து வருகின்ற மாற்றுத் திறனாளிகள் சமூக சேவைகள் அணுகுதல் மற்றும் உள்வாய்கப்பட்ட அபிவிருத்தி இலக்குகளை அடைதல் எனும் திட்டத்தின் கீழ் செயலமர்வு ஒன்று வெள்ளிக்கிழமை (10) திருகோணமலை சர்வோதய வள நிலையத்தில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நா.மதிவண்ணன் மாவட்டச் செயலகத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜீவிதன் சுகந்தினி மற்றும் நவஜீவ நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் முதிதகுமார மற்றும் சமூக சார் பணர்வாழ்வுப்பிரிவின் நிபுனர் கிரிசாந்தி உட்படுத்தல் கலவிச் செயற்பாட்டின் நிபுணர் பியூமிஇரேஸா மற்றுமு; திருகோணமலை மாவட்ட இணைப்பாளர் சுல்பிகா சம்சுதீன் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.


இவ்வமர்வின் போது கருத்துத்  தெரிவித்த கிழக்கு மகாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் நா.மதிவண்ணன்
மாற்றுத் திறனாளிகள் தமது தேவையை தாமே பூர்த்தி செய்க கூடிய அளவில் அவர்களை ஆளுமைப்படுத்தும் செயற்பாடுகளை  முன்னெடுப்பதே  சமூகம் சார் புனர்வாழ்வு செயற்திட்டம். அவ்வாறான திட்டத்தையே நவஜீவன நிறுவனத்தின் திட்டமாக அமைகிறது. 

மேலும் அரசாசர்பற்ற நிறுவனங்கள் தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப திட்டங்களை நடைமுறைப்படுத்தம் வேளையிலே மாற்றுத் திறனாளிகளுக்கு என்ன தேவை எவ்வாறான வேலைத்திட்டம் குறைபாடுகள் உள்ளது என மாற்றுத் திறனாளிகள் அமைப்புக்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் நவஜீவன போன்ற அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் போன்றனவே இன்று எமது மாகாணத்திற்கு அவசியமானது

.எனவே இவ்வாறான சேவைகள் குறித்த பிரதேசங்களை மட்டுப்படுத்தப்ட்hது.மாகாணத்தில் உள்ள சகல பகுதிகளிலும் முன்னெடுக்க வேண்டும் என கிழக்கு மகாகாண சமூக சேவைகள் திணைக்கள பணிப்பாளர் மதிவண்ணன் தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: