7 Jul 2020

ஏமாற்று அரசியல் கலாசாரத்திற்கு மட்டு மாவட்ட தமிழ் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - பொதுஜன பெரமுன மட்டு மாவட்ட வேட்பாளர் ப.சந்திரகுமார்.

SHARE
(சு.நிருவினி)

ஏமாற்று அரசியல் கலாசாரத்திற்கு மட்டு மாவட்ட தமிழ் மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - பொதுஜன பெரமுன மட்டு மாவட்ட வேட்பாளர் ப.சந்திரகுமார்.
மட்டு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு பொதுத் தேர்தலின் பிற்பாடு உடனடியாக தீர்வினைப் பெற்றுத்தருவேன். அதற்கான நடவடிக்கையினை துரிதமாக முன்னெடுத்து வருகின்றேன். தமிழ் மக்கள் ஏமாற்று அரசியல் கலாசாரத்திற்கு ஒருபோதும் அடி பணியக் கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்துள்ளார். 

செவ்வாய்கிழமை (07) மட்டக்களப்பில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…. பொய் கூறி அரசியலில் வந்தவன் நான் இல்லை சொல்வதைச் செய்வேன். மட்டக்களப்பு மாவட்டமானது அபிவிருத்தியில் மிகவும் பின்னிலையில் உள்ளது. அவ்வாறான குறைபாட்டினை தேர்தலின் பிற்பாடு நிறைவு செய்வேன். மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியினை ஒரு போதும் மீறியவன் நான் இல்லை என்னால் செய்யக் கூடிய வேலையினை முழு மனதுடன் நிறைவு செய்வேன். காரணம் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்பாளர் என்ற வகையில் எனக்கு தனிக் கௌரவம் இருக்கின்றது.

அதிமேதகு ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகியோர் எனது கோரிக்கையினை ஏற்றுக் கொள்வார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தளவில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் கல்வி கற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாதிருக்கின்றனர். அதற்கான தீர்வு மிகவிரைவாக கிடைக்கும். மற்றும் கதிர்காம யாத்திரை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருக்கின்றது. இது தொடர்பாக. ஜனாதிபதியுடன் கலந்துரையாடி தீர்வினை பெற்றுத்தருவேன். அத்துடன் பண்ணையாளர்கள் எதிர் கொள்கின்ற மேச்சல்தரை தொடர்பான பிரச்சினைக்கு தீர்வினை முடியுமானவரை பெற்றுத்தருவதில் உறுதியாக இருக்கின்றேன்.

நடைபெறப் போகும் பொதுத் தேர்தல் தமிழ் மக்களின் உரிமையுடன் கூடிய அபிவிருத்திக்கு மிக முக்கியமான தேர்தல். மக்கள் இதுவரைக்கும் விட்ட தவறினை மீண்டும் விடக் கூடாது. மாற்றுச் சிந்தனையுடன் மாற்றத்திற்காக வாக்கினை மொட்டுச் சின்னத்திற்கு வழங்க வேண்டும். மட்டக்களப்பு மாவட்ட மக்களின் ஆதரவினை அரசாங்கம் எதிர்பார்க்கும். அதிகளவான வாக்கினை வழங்குவோமானால் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரைப் பெற்று அபிவிருத்தி இலக்கினை அடைய முடியும்.

வட மாகாண அரசியலை நன்கு அவதானிக்க வேண்டும். அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களும் இருக்கின்றனர் மறுபுறம் எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் இருக்கின்றனர் அபிவிருத்தி சமாந்தரமாக நடைபெறுகின்றன ஆனால் கிழக்கில் தமிழர் அமைச்சராக இருக்கின்றாரா என்றால் இல்லை அவ்வாறான நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து அரச கட்சியில்
போட்டியிடுகின்ற மக்கள் சேவகர்களை தெரிவு செய்ய வேண்டும். அப்போதுதான் மட்டக்களப்பு மாவட்டமானது முழுமையான அபிவிருத்தி இலக்கினை அடையும் எனத் தெரிவித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: