6 Jul 2020

மட்டக்களப்பு நாவற்குடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஞானப்பிரகாசத்தின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

SHARE
(விஜய்)

மட்டக்களப்பு நாவற்குடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஞானப்பிரகாசத்தின் தேர்தல் பிரச்சார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும், பொறியியலாளருமான முருகேசபிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கான பிரதான அலுவலகம் நாவற்குடாவில் இன்று திங்கட்கிழமை(6) ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர்  மா.நிஸ்காந்தராஜா(சூட்டி) தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களான கி.துரைராஜசிங்கம், ஞா.ஸ்ரீநேசன், மா.உதயகுமார், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், ஜனநாயக போராளிகள் கட்சியின் உபதலைவர் ந.நகுலேஸ், கட்சியின் கொள்ளை பரவுச்செயலாளர் ப.கோணேஸ், மாநகரசபை உறுப்பினர்கள், உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள், பொதுமக்கள், பெண்கள்,அமைப்பினர்கள் கலந்துகொண்டார்கள்.

இதன்போது மாவட்டத்தில் நான்கு பிரநிதிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பில் வெற்றிபெறுவதற்கு தமிழ்மக்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையை  பயன்படுத்திக்கொள்வதற்கு மாவட்டத்தில் முனைப்புடன்  செயற்பட்டு வாக்களிப்பு வீதத்தை வழமை போன்றல்லாமல் நூறுவீதம் அதிகரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். வடகிழக்கில் உள்ள தமிழ்மக்கள் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிப்பது தார்மீகமான கடமையாகும் என வேட்பாளர் மு.ஞானப்பிரகாசம் இவ்வாறு குறிப்பிட்டார்.

இன்றிலிருந்து இவ் அலுவலகம் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல கிராமங்களிலும் உள்ள  தமிழ்மக்களின் குறைபாடுகள்,தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதாக வேட்பாளர் மேலும் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: