8 Jun 2020

வழமைக்குத் திரும்பிய மட்டக்களப்பு.

SHARE
வழமைக்குத் திரும்பிய மட்டக்களப்பு.
கொரோனா நோய்த்தாக்கம் தற்போது தனிந்துள்ள நிலையிலும் தேர்தல்களை நடாத்த வேண்டிய கட்டாயத்தில் தற்போதைய ஆளும்கட்சி அரசாங்கம் உள்ளது அந்தவகையில் தேர்தல்கள் ஆணைக்குளுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய முடிவுகளை எடுப்பதற்கான பலகட்ட கலந்துரையாடல்களையும் நடத்திவருகின்றார். அதிலும் அவசியமாக சுகாதார திணைக்களத்தின் அறிவுறித்தல்கள் அடங்கிய கையேடு சுகாதார பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுனர் அணில் ஜெயசிங்கவினால் கையளிக்கப்பட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு பரீட்சாத்த ஒத்திகை தேர்தல் ஆணையாளரின் மேற்ப்பார்வையில் அம்பலாங்கொட வெலிகொட தம்மாயுக்திகாராம விகாரையில் 200 வாக்காளர்களுக்கான பொதுத் தேர்தலுக்கான ஒத்திகை இடம்பெற்றுள்ளது.

கடந்த இரு மாதங்களாக வீடுகளில் முடக்கப்பட்டிருந்த பொதுமக்களும் அரசசார்பற்ற அரசாங்க தனியார் மற்றும் வர்த்தக கூலித்தொழில்களில் ஈடுபடுக்கின்றவர்கள் எல்லாம் திங்கட்கிழமை (08) முதல் தங்களின் தொழில்களை மேற்கொள்வதற்காக செல்வது அவதானிக்க முடிகின்றது. அனைத்து பொதுமக்களும் தங்களின் தொழில்களில் பணிகளை ஆரம்பிக்கும் முன்னதாக சுகாதார திணைக்களத்தி;;ன் அறிவுரைகளை கண்டிப்பாக கடைப்பிடிப்பதுடன் பதற்றம் பரபரப்பு அவதானம் இன்மை கவலையினமாக செயல்படுவதை தவிர்த்து விழிப்புடன் சரியான நிதானத்துடன் தங்களின் கருமங்களை ஆற்றுவது பொருத்தமாக இருக்கும். துங்களின் உயீர்களை கவனமாக முன் எச்சரிக்கையுடன் நடப்பது அனாவசியமான இழப்புக்களை தவிக்கமுடியும்.

பாடசாலை தவிர்ந்த அனைத்து திணைக்களங்களும் வழமைக்கு திரும்பியுள்ளமையினால் மக்கள் அவதியில் பரபரப்புடன் செயற்படுவதும் விபத்துக்களை தற்போது அதிகரித்திருப்பதை யாவரும் அறிந்திருப்பிர்கள் விபத்துக்களினால் மரணங்கள் இந்த வாரத்தில் அதிகரித்துள்ளது இதனை மக்கள் சற்று நிதானத்துடன் செயல்பட முனைய வேண்டும்.

மக்கள் கொரோனாவுடன் தேர்தலை சந்திக்க வேண்டிய காலமாதலால் இனிவரும் காலங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிவரும் என எதிர்பார்க்கப் படுகின்றது இதில் கொரோனாவா? தேர்தலா? என பார்க்கும் போது அரசாங்கத்திற்கு இரண்டும் என்ற நிலையில் தேர்தலுக்கு முதலிடம் கொடுக்க வேன்டிய கட்டாயத்தில் உள்ளது எவ்வாறாயினு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்க வேண்டிய சகலவிதமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றது அதனையும் மீறிமக்கள் செயலப்பாடுகளும் நடைபெறுகின்றது வணக்கத்தலங்கள் திறப்பது தொடர்பில் மத தலைவர்களின் வேண்டு கோள்கள் விடுக்கப்பட்டு வருகின்றது இந்து கோவில்களின் வருடாநத் திருவிழக்களையும் பூசைகளையும் நடத்த முடியாமல் உள்ளனர் அது போன்று பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ தேவாலையங்கள் என எல்லோரு மக்களை அதிகளவானோர்களை கூட்டுவதற்கு எத்தணிக்க வேண்டாம் என்பதுதான் சுகாதாரப் பகுதியினரின் வேண்டு கோளாகும்.
SHARE

Author: verified_user

0 Comments: