2 Jun 2020

தேசிய உணவு உற்பத்தியினை விரிவுபடுத்த மட்டக்களப்பில் புதியதிட்டம் அமுலாகின்றது.

SHARE
தேசிய உணவு உற்பத்தியினை விரிவுபடுத்த மட்டக்களப்பில் புதியதிட்டம் அமுலாகின்றது.

உள்நாட்டு விவசாயத்தின் உற்பத்திதிறனை அதிகரிக்க எதிர்காலத்தில் இலவசமானியம் இலவச உள்ளீடுகள்  விவசாய ஏற்றுமதி கிராமங்கள் உருவாக்குதல் மற்றும் ஏனைய உற்பத்தி உதவிகளை வழங்குவதற்கு மாவட்டமட்டத்தில் புதிய தரவுகளை சேகரிக்கவிவசாய  திணைக்களம் கமநல சேவைகள் திணைக்களம் விவசாயவிரிவாக்கல் திணைக்களம் ஆகியவற்றால் தற்பொழுது மாவட்டமட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களால் சேகரிக்கப்பட்டு வருகின்றது.


இந்த புதிய தரவு திரட்டல் மூலமே ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்சவின் வழிகாட்டல் மூலம்மாவட்டம் மாகாணம் மற்றும் தேசியரீதியில் உணவு உற்பத்தி திட்டங்கள் வகுக்கப்படவுள்ளதாக மாவட்ட விவசாயபணிப்பாளர் வை.வீ.இக்பால் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைக்கமைய மட்டக்களப்பு மாவட்டமட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்களை தயார்படுத்தும் விசேடகூட்டம் செவ்வாய்கிழமை (02) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் நடைபெற்றது. 

இதில் மாவட்ட விவசாயபணிப்பாளர் வை.வீ.இக்பால் மாவட்ட பணிமனை தலைமையகவிவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட விவசாயஅ பிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். 







SHARE

Author: verified_user

0 Comments: