15 May 2020

ஏமாற்று அரசியல் கலாசாரத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி வேண்டுகோள்.

SHARE


(சுதா)
ஏமாற்று அரசியல் கலாசாரத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி வேண்டுகோள்.
ஏமாற்று அரசியல் கலாசாரத்திற்கு வடகிழக்கு தமிழ் மக்கள் எதிர் காலத்தில் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அப்போது தான் தமிழர் பாரம்பரிய பண்பாட்டு விடயங்களை பாதுகாக்க முடியும்.

இவ்வாறு எதிர் கால அபிவிருத்தியும், தேர்தல் நகர்வுகள் தொடர்பாக கட்சி ஆதரவாளர்களை தெளிவூட்டும் நிகழ்வு கிரான்குளத்திலுள்ள சடோ நிறுவன அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்றது.

இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் பிரதி அமைச்சர் சோ.கணேசமூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கும் போது அண்மைக் காலங்களாக நாட்டில் ஏற்பட்ட கொரோனா தாக்கம் காரணமாக பல குடும்பங்கள் தொழில் இழந்து நிர்க்கதியாக இருந்த கால கட்டத்தில் பல அரசியல் வாதிகள் மழைக்கு கறையான்கள் ஒழிந்து கொள்வது போன்று மறைந்திருந்தனர். தற்போது புற்றிலிருந்து வெளியே வந்திருக்கின்றனர். இது அவர்களின் மனித நேயத்திற்கு உதவி செய்ய முடியாத மனப்பாங்கினை காட்டுகிறது.

தேர்தல் காலத்தில் மாத்திரம் மக்களிடம் வீர வசனங்களை உரைத்து வாக்கினை கொள்ளையிடும் அரசியல் கலாசாரத்திற்கு இம்முறை பாடம் புகட்டுவதற்கு கட்சித் தொண்டர்கள் முழுமையான பங்களிப்பினை வழங்க வேண்டும்.

மட்டு மாவட்டத்தினை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்லக்கூடிய அரசியல் திறன் கொண்ட மக்கள் பிரதி நிதிகளை தெரிவு செய்ய வேண்டிய பாக்கியம் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது.இழந்த பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவதற்கு சிறந்த மக்கள் சேவகர்கள் உதயமாக மக்கள் வழி வகுக்க வேண்டும்அதற்கான கதவு திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: