11 May 2020

விவேகானந்த சமூகநலப்பிரிவின் நிவாரணப்பணி

SHARE
(திலக்ஸ்)

விவேகானந்த சமூகநலப்பிரிவின் நிவாரணப்பணி.கோரோனா வைரஸ் தாக்கத்தின் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கை அரசானது ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியதன் காரணமாக அன்றாட தினக்கூலி செய்யும் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து நிர்க்கதிக்குள்ளாகியிருந்தது. 

அதனை சீர்செய்யும் முகமாக  விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் சமூகநல சேவைப் பிரிவின்  4 ஆம் கட்ட நிவாரணப் பணி மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் இருந்து நகர்புறங்களிற்கு அன்றாட கூலித்தொழிலுக்கும் செல்லும் குடும்பங்களிற்கான உலர் உணவு வழங்கும் உதவியினை கனேடிய தமிழ் மருத்துவ சங்கம் விவேகானந்த தொழில்நுட்ப கல்லூரியின் சமூகநல பிரிவினருக்கு ஊடாக வழங்கியுள்ளனர். 

இவ் உதவி வழங்கும் செயற்பாடானது மண்முனை பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைவாக கிராம சேவையாளர்களின் கண்காணிப்பின் கீழ் 180 குடும்பங்களிற்கு வழங்கப்பட்டது. 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிவாரணப் பணியில் புலம்பெயர் உறவுகளின் தனிப்பட்ட மற்றும் அமைப்புக்கள் சார்ந்த உதவிகள் மூலமாக இதுவரைக்கும் 1100 இற்கு மேற்பட்ட குடும்பங்களிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு இவ்வாறான உதவியினை வழங்கிக்கொண்டிருக்கும் புலம்பெயரர்  உறவுகள் அனைவருக்கும் நன்றியினையும் கல்லூரியின் பணிப்பாளர் க.பிரதீஸ்வரன் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: