30 Apr 2020

மட்டக்களப்பில் பீசீஆர் பரிசோதனைக்காக நுன்னுயிரியல் ஆய்வுகூடம் நிறுவப்பட்டுள்ளது மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப அத்தியட்சகர் ஸாகிர் தெரிவிப்பு.

SHARE
மட்டக்களப்பில் பீசீஆர் பரிசோதனைக்காக நுன்னுயிரியல் ஆய்வுகூடம் நிறுவப்பட்டுள்ளது மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப அத்தியட்சகர் ஸாகிர் தெரிவிப்பு.மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பீசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக நுன்னுயிரியல் ஆய்வுகூடம் ஒன்றினை நிறுவுவதற்காக இப்போதனா வைத்தியசாலையில் இருக்கின்ற வழங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் புதன்கிழமை  (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநட்டில் மருத்துவ ஆய்வுகூட தொழினுட்ப அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஸாகிர் கருத்துத் தெரிவித்தார். 

இவ்வாய்வுகூடம் மூலம் கடந்த இரண்டு தினங்களாக பீசீஆர் பரிசோதனை மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக தம்மிடமுள்ள 30 வைத்திய ஆய்வுகூட தொழிநுட்பவியலாளர்கள் உள்ளனர் எனவும் இவர்களில் 15 பேரை கடமைக்கு சுழற்சி முறையில் தெரிவு செய்திருப்பதாகவும் இதில் 5 பேரை மாத்திரம் தற்போது இப்பரிசோதனை நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். நோய்த் தாக்கம் அதிகரித்து தேவை ஏற்படின் வேறு வைத்தியசாலைகளில் இருந்த உத்தியோகத்தர்கள் இக்கடமைக்காக எடுக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். 

மேலும் இவ்வுத்தியோகத்தர்கள் காலை 8.30மணி முதல் மறநாள் அதிகாலை 4மணி வரை அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இதற்கேற்றவகையில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டார்.

இவ்வூடகவியலாளர் மாநாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், வைத்தியசாலை கொரோனா தடுப்பு செயலனி பிரதானியும், மயக்க மருந்து விசேட வைத்திய நிபுணருமான டாக்கடர் எஸ். மதனழகன், நுன்னுயிரியல் தொற்றுநோய் விசேட நிபுனர் டாக்டர் வைதேகி, ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.


SHARE

Author: verified_user

0 Comments: