16 Apr 2020

பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து மக்கள் மும்முரமான அத்தியாவசியப் பொருட் கொள்வனவு.

SHARE
பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து மக்கள் மும்முரமான அத்தியாவசியப் பொருட் கொள்வனவு.
கொவிட் - 19 எனப்படும் கொரோனா எனும் புதிய வகை வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாப்கும் நோக்குடன் அமுலிலிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் வியாழக்கிழமை (16) காலை 6 மணிக்குத் தளர்த்தப்பட்டதையடுத்து, மக்கள் தமது அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். மருந்து வகைகள், மற்றும் வங்கிகளில் பணம் மீளப் பெறுதல் மரக்கறி உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்தல் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களைக் மிக நீண்ட வரிசையில காத்திருந்து கொள்வனவு செய்து வருகின்றனர்.

மாவட்டத்திலுள்ள பிரதான களுவாஞ்சிகுடி, கொக்கட்டிச்சோலை, ஆரையம்பதி, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், ஆரையம்பதி, செங்கடி, வாழைச்சேனை, உள்ளிட்ட அனைத்துப் பொதுச்சந்தைகள் எதுவும் இன்றயத்தினம் இயங்காத போதிலும் வீதி ஓரங்கள், மர நிழல்கள், உள்ளிட்ட பல இடங்களிலும், கிராமங்களில் வாகனங்களிலும், நடமாடும் மரக்கறி வர்த்தக நிலையங்களுடாக ஆங்காங்கே விற்பனை செய்யப்படு வரப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது. 
குறிப்பாக வங்கிகளிலும், மருந்தகங்களிலும், அதிகளவு மக்கள் மிக நீண்ட வரிசையில் நிற்பதை காணமுடிகின்றது.

இந்நிலையில் பொலிராசர், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படியினர் உள்ளிட்டோர் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுவட்டு வருவதையும், மக்கள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளிகளைப் பேணுதல் உள்ளிட்ட விடையங்களையும், அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் வழமையாக மக்கள் நடமாடுவது போல் இன்றயத்தினம் குறைந்தளவிலேயே மக்கள் வீதிகளில், நடமாட்டத்தையும் அவதானிக்க முடிகின்றது. 













SHARE

Author: verified_user

0 Comments: