16 Apr 2020

வாதப் பிரதி வாதங்களுடன் நடைபெற்ற மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 26 வது சபை அமர்வு.(வீடியோ)

SHARE
வாதப் பிரதி வாதங்களுடன் நடைபெற்ற மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 26 வது சபை அமர்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 26 வது சபை அமர்வு வியாழக்கிழமை (16) நடைபெற்றது. சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில் பிரதித் தவிசாளர் திருமகதி.க.ரஞ்சினி மற்றும்
  பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கொரோனா தொற்று தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்பட்டுவரும் பீதியின் காரணமாக மக்களை எவ்வாறு பாதுகாப்பாக நடாத்துவது, பிரதேசத்திலுள்ள அனைத்து பொதுச் சந்தைகளையும் மூடி கிராமங்கள் தோறும் காணப்படும் பொதுவிளையாட்டு மைதானங்களில் பாதுகாப்பான முறையில் பொலிஸ் ஊரடங்கு தளர்த்தப்படும் நாட்களில மாத்திரம் மரக்கறி வியாபாரங்களை மேற்கொள்வதங்கு உரிய முயற்சிகளை எடுத்தல், ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் அன்றயத்தினம் மாலை ஊரடங்கு அமுலுக்கு வரும் இந்நலையில் அதற்கு மறுநாள் பொது இடங்களில் கிருமி அழிப்பு நாசினிகளை விசிறுதல், ஊரடங்கு காலத்தில் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நலன் சார்ந்த சேவைகளில் ஈடுபடுவதற்கு பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுமதியைப் பெற்றுக் கொடுக்க முயற்சித்தல், நடமாடும் சிகை அலங்கார வேலைகளை மேற்கொள்ள அனுமதித்தல், திண்மக்கழிவகற்றல் ஊழியர்களுக்கு உச்சமாக 20 வேலை நாட்கள் வழங்கல், ஏனைய பதில் கடமை ஊழியர்களுக்கு உச்சமாக 17 வேலை நாட்கள் வழங்கல், சபையின் அனைத்து நிரந்தர பதிலீட்டு தொழிலாளர்களுக்கு மறு அறிவித்தல வரை மேலதிக நேரக் கொடுப்பனைவை நிறுத்துதல், சிக்கனத்துடன் செசலவுகளை மேற்கொள்தல், போன்ற பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இதன்போது ஊரடங்கு தளர்த்தப்படும் நாட்களில் ஆங்காங்கே உள்ளுர் மரக்கறி வகைகளi விற்பனை செய்வது தொடர்பிலும், பிரதேச சபையினால் இப்பிரதேச மக்களுக்கு நிவாரண்கள் வழங்குவது தொடர்பிலும், பிரதேச சபை உறுப்பிரங்கள் மற்றும் தவிசாளரிடையே வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. 

கொரோனா நோயை எமது பிரதேசத்தில் ஒழித்துக் கட்டுவதற்கு எமது சபை பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றது. அதற்கு எமது சபை எதுவித தடையுமில்லை. அதற்காக வேண்டி எமது சபை உத்தியோகஸ்த்தர்களும், சபை உறுப்பினர்களும், மிகவும் அற்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றார்கள். ஆனாலும் எமது சபையைப் புறக்கணித்ததாகத்தான் அரசாங்க அதிபர் உள்ளிட்டோரின் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலையில் எதுவித வருமானமில்லாத நிலையிலும் எமது சபையிலுள்ள நிதியைக் கொண்டுதான் தற்போதைய செயற்பாடுகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸை ஒழிப்பதற்கு நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அனைவரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும். என இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் இதன்போது தெரிவித்தார்.















https://youtu.be/0b6yn5hhID4
SHARE

Author: verified_user

0 Comments: