11 Apr 2020

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை - 15 கோடா , கசிப்பு பரல்கள் மீட்பு.

SHARE
(சதீஸ்)

மட்டக்களப்பு   வவுணதீவு பொலிஸ் பிரிவில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை - 15 கோடா , கசிப்பு பரல்கள் மீட்பு.
மட்டக்களப்பு  - வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள  பன்சேனை, நெடுஞ்சேனைபகுதியிலுள்ள காட்டுப்பகுதியில் போன்ற  வவுணதீவு பொலிசாரால் வெள்ளிக்கிழமை (10) இரவு மேற்கொணட  சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது பெரும் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதிலிருந்த 15 பரல்கள் கோடா, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் போன்றவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

வவுணதீவு பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவுக்கு கிடைந்த இரகசிய தகவலுக்கமைவாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிஷாந்த ஹப்புகாமி, உதவி பொலிஸ் பரிசோதகர் சஜித் போன்றோரின் தலைமையில் நடைபெற்ற இந்த நடவடிக்கையின்போது மேற்படி சட்டவிரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கசிப்பு, கோடா, பரல்களை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் எல்.கே.குமாரசிறி  சனிக்கிழமை (11) காலை நேரில் சென்று பார்வையிட்டார்.  

இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் காட்டுக்குள் தப்பியோடி விட்டதாகவும், அவர்களை கைதுசெய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் காட்டுப்பகுதியில்  அதிகரித்துள்ள நிலையில் இந்த பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



SHARE

Author: verified_user

0 Comments: