19 Mar 2020

வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை

SHARE
(துசா)

வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து, மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் உள்ள வீடுகளில் தங்கியுள்ளவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ரி.தவனேசன் தெரிவித்தார்.

மகிழடித்தீவு வைத்தியசாலையில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஒன்றுகூடலில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.

நாட்டில் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று மண்முனை தென்மேற்கு பிரதேசத்தில் பரவாமல் தடுக்கும் முகமாக செயலணியொன்றும் புதன்கிழமை உருவாக்கப்பட்டது.

பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி, பிரதேச செயலாளர், பிரதேச சபையினர், பொலிஸார், இராணுவத்தினர், கிராம அமைப்புக்கள், ஏனைய திணைக்களங்கள், அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளடங்கிய வகையில்  இச்செயலணி உருவாக்கப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து வருகைதந்து, தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்படாதவர்களை இனங்கண்டு, அவர்களது வீடுகளிலேயே 14நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைத்தல், மதத்தலங்கள் ஊடாக விழிப்புணர்வு அறிவித்தல்களை உடனுக்குடன் வழங்குதல், அனாவசியமாக வீதிகளில், பொது இடங்களில் நடமாடுகின்ற நபர்களை குறைத்தல் போன்ற செயற்பாடுகளை முன்னெடுப்பதெனவும் இதன்போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


SHARE

Author: verified_user

0 Comments: