19 Mar 2020

தமிழரசு கட்சியின் இளம் வேட்பாளராக இரா.சாணக்கியன்

SHARE
(திலக்ஸ்) 


தமிழரசு கட்சியின் இளம் வேட்பாளராக இரா.சாணக்கியன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை நடைபெறப்போகும் பாராளுமன்ற தேர்தலில் இரு இளம் வேட்பாளர்களை தெரிவு செய்துள்ளது. புதன்கிழமை (18.03.2020) தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தது. தமிழரசு கட்சி சார்பாக இரா.சாணக்கியனும், தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக ந.கமலதாஷனும், தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தமிழரசு கட்சியில்  இரா.சாணக்கியன் 29 வயதில் வேட்பாளராகும் சந்தர்ப்பத்தை வாலிபர் முன்ணணி தலைவர் தீபாகரன் வரவேற்றுள்ளார். இது குறித்து தீபாகரன் கருத்து தெரிவிக்கையில்… வாலிபர் முன்ணணியின் சார்பாக  இரு வேட்பாளர்கள் களமிறக்க வேண்டுமென கட்சியின் பொதுச் செயலாளருக்கு தெரிவித்திருந்தோம். அதன்பிரகாரம் எமது சொல்லுக்கு வாய்ப்பளித்து இளம் வேட்பாளராக இரா.சாணக்கியனை தெரிவு செய்துள்ளதுனர். இது மிகவும் வரவேற்கதக்கது. இவருடைய  வெற்றிக்காக தமது வாலிபர் முன்ணணி பாடுபடும், கடந்த காலங்களில் சாணக்கியனின் வேட்பாளர் தெரிவு குறித்தும், வாலிபர் முன்ணணி விருப்பமின்மை எனவும் அநாமோதய இணையத்தளங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. இந்த செய்தி முற்றிலுமாக உண்மைக்கு புறம்பானது. ஆகவே இரா.சாணக்கியனின் வெற்றி பெற்றால் இளைஞர்களுக்கு கிடைத்த வெற்றியாகும் எனத் தெரிவித்தார்.

காலத்திற்கேற்றவாறு வேட்பாளரை தமிழரசு கட்சி இளம்தலைமுறையினருக்கு வாய்ப்பளித்துள்ளது. இத்தெரிவானது நான்காவது ஆசனத்தை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பெற்றுக் கொடுப்பதற்கு ஏதுவாக அமையும் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பட்டிருப்பு தொகுதியினருக்கு மட்டுமன்றி மட்டக்களப்பு இளைஞர் யுவதிகளின் வாக்குகளை கணிசமான அளவு பெறக்கூடியளவிற்கும், விமர்சனங்களிற்கு செவிசாய்த்து அதற்கு ஏற்றாற் போல் வேட்பாளரை தெரிவு செய்துள்ளமை வரவேற்கத்தக்கது என அரசியல் அரங்கில் பேசப்பட்டு வருகின்றது. தமிழ் தேசியத்தின் இலக்கினை அடுத்த தலைமுறையினருக்கு சரியான முறையில் கையளிப்பதனூடாக தமிழ்  தேசிய இலக்கினை அடையலாம். என்பது அவர்களது திண்ணம்.

இரா.சாணக்கியன் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினூடாக தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயற்பட்டு கல்வி, விளையாட்டு, வாழ்வாதாரம் போன்ற சமூக சேவைகளை தங்களது சொந்த நிதியினூடாக மக்களுக்கு சேவை செய்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


SHARE

Author: verified_user

0 Comments: