6 Feb 2020

இலங்கையின் சிறந்த விவசாய நடைமுறை கொள்கைகளை பின்பற்றி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலையம் திறந்து வைப்பு.

SHARE
இலங்கையின் சிறந்த விவசாய நடைமுறை கொள்கைகளை  பின்பற்றி உற்பத்தி செய்து விற்பனை செய்யும் நிலையம் திறந்து வைப்பு.
விவசாயத் திணைக்களத்தின் விவசாய வியாபார மற்றும் அலோசனைப் பிரிவின் மட்டக்களப்பு மாவட்டக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் இலங்கையின்(SL-GAP சிறந்த விவசாய நடைமுறை கொள்கைகளை  பின்பற்றி உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் விற்பனை நிலையம். ஓன்று மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பில் அமைந்துள்ள களுவாஞ்சிகுடி உதவி விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தின் முன்னால் வியாழக்கிழமை (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

விவசாயத் திணைக்களத்தின் விவசாய வியாபார ஆலோசகர் எச்.எம்.றியாழ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவாட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஏ.போரின்பராசா, மண்முனை தென் எருவில் பற்றுதின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.த.சத்தியகௌரி, மண்முனை பிரதேச சபையின் தவிசாளர் ஞா.யோகநாதன், களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொரிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எம்.சிறிவர்த்தன, மற்றும் விவசாயிகள், தொழில் நுட்ப உத்தியோகஸ்த்தர்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டனர்.

இதன்போது சிறந்த விவசாய நடைமுறைகள் தொடர்பில் தெழிவூட்டல் இடம்பெற்றதோடு, இலங்கையின் (SL-GAP சிறந்த விவசாய நடைமுறை கொள்கைகளை  பின்பற்றி மரக்கறிவகைகள், மற்றும் பழ வகைகளை உற்பத்தி செய்து வினியோகம் செய்யும், சிறந்த விவசாயிகள் 5 போருக்கு மரக்கறிகள், மற்றும் பழ வகைகள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லும் கூடைகள் வழங்கப்பட்டதுடன், 3 பேருக்கு தரச் சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.






















SHARE

Author: verified_user

0 Comments: