22 Feb 2020

பாதிக்கப்பட்ட சமூகத்தையும், மாற்றுத்திறனாளிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்று அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து மாற்றுத்திறனாளிகளின் துயர்துடைக்க வேண்டும் என தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் அருள்மொழி

SHARE
பாதிக்கப்பட்ட சமூகத்தையும், மாற்றுத்திறனாளிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்று அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்து மாற்றுத்திறனாளிகளின்  துயர்துடைக்க வேண்டும் என தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர் ச.அருள்மொழி தெரிவித்தார்.
தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஊடக சந்திப்பு இன்று சனிக்கிழமை(22)காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஊடகப்பணிப்பாளர் க.நிவாசன் தலைமையில் இடம்பெற்றது.இவ் ஊடகசந்திப்பில் மட்டக்களப்பு, அம்பாறையைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்,தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர்கள்,அங்கத்தவர்கள் கலந்துகொண்டார்கள்.

தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பணிப்பாளர்  ச.அருள்மொழி தொடர்ந்து உரையாற்றுகையில்:-யுத்தம்,ஏனைய விடயங்களினால் மாற்றுத்திறனாளிகள் உருவாகியுள்ளன.யுத்தகாலத்தில் பின்பு சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் மனோபலத்தை பலப்படுத்தி சமூகத்தில் இணைத்து சமூக அந்தஸ்துள்ள பிரஜையாக மாற்றவேண்டும் என்பதுதான் தமிழ்மாற்றுத்திறனாளிகள் அமைப்பை உருவாக்கியுள்ளோம்.மாற்றுத்திறனாளிகள் இன,மத,மொழி பேதங்களை கடந்து சமூக அக்கறையுடன் செயற்படுபவர்கள்.மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் தேசிய ரீதியாக 23 பதக்கங்களை பெற்றுள்ளோம்.தேசிய ரீதியாக பதக்கம் வென்ற கண்தெரியாத பிள்ளைகள் மூன்று(3)தங்கப்பதக்கங்களை பெற்றிருக்கின்றார்கள்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சமூக நீரோட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.மாற்றுத்திறனாளிகளின் கல்வித்தகமை,திறன்விருத்தியை கொண்டு அரசியல்வாதிகளிடம் தொழில் வழங்குவதற்கு கோரியிருந்தோம்.பல அரசியல்வாதிகள் வேலைவாய்பில் புறக்கணித்தார்கள்.இருந்தும் வெளிநாட்டு உறவுகளின் பண உதவிகளை வழங்கினார்கள்.இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளை பல தொழில் முயற்ச்சியாளர்களையும், முதலாளிகளையும் உருவாக்கியுள்ளோம். பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு புலம்பெயர் தமிழ் உறவுகளின் நிதிப்பங்களிப்புடன் 150000,200000 பெறுமதியான சுயதொழில் ஊக்குவிப்பு கடன்களை வழங்கி உழைக்கும் வலுக்கொண்ட மாற்றுத்திறனாளிகளாக மாற்றியமைத்துள்ளோம்.

இன்று அரசாங்கத்தினால் மாற்றுத்திறனாளிகளுக்கு  வருடமொன்றுக்கு 30,000 ரூபாவை வழங்கப்படுகின்றது.வருடமொன்று 30,000 ரூபா பணஉதவி போதாக இருக்கின்றது.கிழக்கு மாகாணத்தில் 18001 மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள்.மட்டக்களப்பு மாவட்டத்தில் 7400 மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள்.மட்டக்களப்பில் 3200 மாற்றுத்திறனாளிகள் பிறப்பினால் உருவாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றார்கள்.முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட,இடுப்புக்குகீழ் இயங்காதவர்கள்,கண்பார்வை இழந்தவர்கள் போன்றவர்களின் விடயங்களை சுயமாக வெளிக்கொணரப்பட வேண்டும்.பாதிக்கப்பட்ட சமூகத்தையும்,மாற்றுத்திறனாளிகளையும் அரசாங்கம் பொறுப்பேற்று மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை வசதிகளை வழங்கப்பட்டு  துயர்துடைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.





SHARE

Author: verified_user

0 Comments: