11 Feb 2020

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த 9473 மில்லியன் ரூபாய் நிதி இதுவரையில் கிடைக்கப்பெறவிலலை – பிரசாந்தன்.

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த 9473 மில்லியன் ரூபாய் நிதி இதுவரையில் கிடைக்கப்பெறவிலலை – பிரசாந்தன்.
கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அதன் மூலம் ஆட்சிபீடம் ஏறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசும், தொடர்ந்தும் எவ்வாறு 61 வருடகாலமாக தமிழர்களை எவ்வாறு ஏமாற்றி வருகின்றதோ, அதுபோல் ஏமாற்றியுள்ளது. அந்த அடிப்படையில் நல்லாட்சி என்ற அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களிடம் வாக்குகளைப் பெறுகின்ற இயந்திரங்களாக மட்டக்களப்புத் தமிழர்களையும், கிழக்குத் தமிழர்களையும் பாவித்து, ஏமாற்றிய வரலாற்றின் ஒரு எச்சக்குன்றாகக் காணப்படுகின்றது.

என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள அவரது காரியலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

எமது தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தனினால் 2012 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட மட்டக்களப்பு பாடுமீன் கடற்கரை வீதீ கடற்கரை ஓரமாக மட்டக்களப்பிலிருந்து கல்குடா வரையில் செல்வதற்கு, அவ்வீதிக்குரிய நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டிருந்தபோதும், அந்த அமைச்சரவைத் தீர்மானத்தைக் கொண்டு அந்த நிதி பெறமுடியாததன் காரணத்தினால், தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 9473 மில்லியன் ரூபாய் நிதி 2017 ஆம் ஆண்டு கிடைக்கப் பெறவேண்டிய நிதி இதுவரையில் கிடைக்கப்பெறாமலிருக்கின்றது. இவ்விடையம் குறித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவிடமும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம். அதற்குரிய நிதியை மிக விரைவில் ஒதுக்கீடு செய்து தருவதாக எமக்கு அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.

கடந்த அரசாங்கத்தினால் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்து என்றவுடனேயே மட்டக்களப்பு மண்டூர் பாலத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதுபோல் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்மந்தன் அவர்களால் கிழக்குமாகாண சபை கலைக்கப்படும் இறுதிச்சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு கிரான் புல் அணைக்கட்டுக்கு அடிக்கல் நட்டு வைக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழிந்துள்ள நிலையில் நட்டு வைக்கப்பட்ட அடிக்கற்கள் முளைக்கவும் இல்லை, மக்களுக்கான எதுவித அபிவிருத்திகளும், முன்னெடுக்கப்படவுமில்லை. இவ்வாறான விடையங்கள் மக்களை ஏமாற்றிய நாடகங்களாக அரங்கேறியிருக்கின்றன. எனவே விடுபட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை முன்கொண்டு செல்ல எமது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. 

நிறுத்தி வைக்கப்பட்ட அபிவிருத்தித்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகளைக் கொண்டு வந்து அவற்றை மேற்கொண்டு செல்ல நாம் முயற்சி செய்து வருகின்றோம். இவற்றை மக்கள் தெழிவாகப் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். மக்களை வாக்களிக்கும் இயந்திராங்களாக மாத்திரம் பயன்படுத்துகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளை மக்கள் நன்கு விளங்கிக் கெண்டு மக்கள் செயற்படுவார்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது என அவர் இதன்போது தெரிவித்தார். 



SHARE

Author: verified_user

0 Comments: