26 Jan 2020

மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

SHARE
 மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து குறித்த துண்டு பிரசுரங்கள் மட்டக்களப்பு பேருந்து நிலையத்திற்கு மேல் உள்ள மட்டு ஊடக அமையத்தின் அலுவலகத்திற்குள் கடந்த வியாழக்கிழமை (23.01.2020)   மரண அச்சுறுத்தல் விடுத்து துண்டுப் பிரசுரங்கள் போடப்பட்டிருந்தன.

இவ்விடையம் குறித்து குறித்த ஊடகவியலளார்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை (23.01.2020)   முறைப்பாட்டைப் பதிவு செய்துள்துடன் வெள்ளிக்கிழமை (24.01.2020)  இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அறுவலத்திலும் மறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளனர். அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது…. 

மட்டு ஊடக  அமையத்திற்குள்  ஊடக சந்திப்பிற்காக ஊடகவியலாளர் சென்று அலுவலகத்தை  வியாழக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் திறந்த போது குறித்த துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

வீசப்பட்ட துண்டு பிரசுரத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது. எச்சரிக்கை! எச்சரிக்கை! என்ற தலைப்பில் இவர்கள் தான் வெளிநாட்டு புலிகளிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசுக்கு எதிராக செயற்படும் ரிப்போட்டர்ஸ். இவர்களுக்கு விரைவில்  மரண தண்டனை விதிப்போம். என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புகைப்படத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு வாலசிங்கம் கிருஷ்ணகுமார், செல்வக்குமார் நிலாந்தன், புண்ணியமூர்த்தி சசிகரன், குகராசு சுபோஜன், நல்லதம்பி நித்தியானந்தன், வடிவேல் சக்திவேல், சுப்பிரமணியம் குணலிங்கம். 

மேற்குறித்த சம்பவமானது எமது ஊடக செயற்பாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதுடன்  அனைத்து ஊடகவியலாளர்கள் மத்தியிலும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து விசாரணை நடத்துமாறு தங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம் என அந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளர்.




SHARE

Author: verified_user

0 Comments: