26 Jan 2020

மருந்துக் கையாளுகை சட்ட ஒழுங்கு விதிகளை மருந்தக உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் தவறின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் உணவு மருந்துப் பொருட்கள் பரிசோதகர் ரீ. வரதராஜன்

SHARE
மருந்துக் கையாளுகை சட்ட ஒழுங்கு விதிகளை மருந்தக உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும் தவறின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் உணவு மருந்துப் பொருட்கள் பரிசோதகர் ரீ. வரதராஜன்.
மருந்தகங்களின் உரிமையாளர்கள் மருந்துக் கையாளுகை சட்ட ஒழுங்கு விதிகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் தவறின் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவின் உணவு மருந்துப் பொருட்கள் பரிசோதகர் (Food and Drugs Inspector) ரீ. வரதராஜன் nரிவித்தார்.

ஏறாவூர் நகர சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இடம் பெற்றுவரும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக மருந்தக உரிமையாளர்களுக்கும் அங்கு பணிபுரிவோருக்கும் அரச சட்ட ஒழுங்கு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வுட்டும் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை 26.01.2020 ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரிப் பணிமனையில் இடம்பெற்றது.

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். தாரிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்து தெளிவூட்டல் செய்த உணவு மருந்துப் பொருட்கள் பரிசோதகர் வரதராஜன் மேலும் கூறியதாவது,
இளம் சந்ததியைக் காப்பாற்ற வேண்டிய மருந்தகங்கள் அவர்களுக்குப்  பாதிப்பேற்படும் வகையில் நடந்து கொண்டால் அது சமூகத் தவறாகக் கருதப்படும்.

அதற்காக சட்ட நடவடிக்கைகளையும் அவர்கசள் எதிர்கொள்ள நேரிடும்.
சட்டத்தின் அடிப்படையில் மருந்து விநியோகம் சம்பந்தமான சிறந்த நம்பிக்கையை மருந்தகங்கள் ஏற்படுத்த வேண்டும்.
இதற்கென தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டம் நடைமுறையில் உள்ளது.

பொதுமக்களின் உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடிய மருந்துப் பொருட்களை விற்பனை செய்தால் இரண்டு இலட்ச ரூபாய் தண்டப்பணம், மூன்றாண்டு சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்,
அதிகார சபையிடமிருந்து மருந்தகத்தைக் கொண்டு நடாத்துவதற்கு உரிய அனுமதிப்பத்திரம் பெறப்ப்பட்டிருக்காதவிடத்து ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணமும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.

மேலும் மேற்குறிப்பிட்ட தண்டனைகளுடன் தாம் அத்தவறை மீண்டும் புரியமாட்டேன் என உறுதியுரை தெரிவிக்கும் வகையில் இலங்கையில் வெளியாகும் மும்மொழிப் பத்திரிகைசகளில் விளம்பரம் செய்து மொதுமக்களிடம் பொது மன்னிப்புக் கோர வேண்டும்
பாடசாலை மாணவர்களையும் இளைஞர் யுவதிகளையும் இலக்கு வைத்து ஐஸ் போதைப் பொருள் உட்பட இன்னும் பல போதை மாத்திரைகளும் பானங்களும் விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்து சுகாதாரப் பிரிவு கடும் விழிப்பாய் இருந்து வருகிறது.

சட்டமும் ஒழுங்கு விதிகளை மீறும் மருந்தக உரிமையாளர்கள், அங்கு பணியும் ஊழியர்கள் மீது சட்டம் கடுமையாகப் பாயும்” என்றார்.






SHARE

Author: verified_user

0 Comments: