2 Jan 2020

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அறிமுகம்

SHARE
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அறிமுகம்
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இவ்வாண்டின் முதல் தேதி தொடக்கம் இலத்திரனியல் சுகாதார அட்டை (னுபைவையட ர்நயடவா ஊயசன) வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாரஞ்சனி கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இலத்திரனியல் சுகாதார அட்டை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை 01.01.2019 பணிப்பாளரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள்,; வைத்தியர்கள், நிர்வாக பிரிவு உத்தியோகத்தர்கள், தாதியர்கள், வைத்தியசாலை அலுவலர்கள் உட்பட வைத்தியசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களும் சிகிச்சை பெறுவோரும் கலந்து கொண்டனர்.

இலத்திரனியல் சுகாதார அட்டையை சிகிச்சை பெறுவோருக்கு வழங்கி வைத்து  கருத்து தெரிவித்த பணிப்பாளர் கலாரஞ்சனி, இவ் இலத்திரனியல் சுகாதார செயற்பாட்டின் ஆரம்ப நடவடிக்கையாக நோயாளர்களது விவரங்கள் கணனி மயப்படுத்தப்பட்டுள்ளதோடு இவ் அட்டை தனிபட்ட சுகாதார இலக்கத்தினை (Personnel Health Number) உடையதாக காணப்படும்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இவ் வைத்தியசாலை முழுமையான கணனி கட்டமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்டு நோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள், வைத்திய பரிசோதனை அறிக்கைகள் போன்ற சகல விடயங்களும் ஒவ்வொரு நோயாளர்களுக்கும் உரிய தனிப்பட்ட சுகாதார இலக்கத்தின் கீழ் பாதுகாப்பான முறையில் உள்ளீர்க்கப்படும்.

அத்துடன் வெளி நோயாளர் பிரிவையும் இலத்திரனியல் (Digital OPD) செயற்பாடாக மாற்றுவதற்கு வைத்தியசாலையின் சுகாதார தகவல் பிரிவும் தகவல் தொழில்நுட்ப பிரிவும் ரநடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

ஒவ்வொரு நோயாளியும் தங்களது விவரங்களை தேசிய அடையாள அட்டையில் உள்ளவாறு பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம், தொலைபேசி இலக்கம் என்பனவற்றை வழங்கி இவ் அட்டையினை பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த இலத்திரனியல் சுகாதார அட்டை Monochrome laser தொழில் நுட்பத்துடன் PVC அட்டையில் அழிவடையாதவாறு பதிவு செய்து வழங்கப்படும்.

மேலும் இந்த அட்டை ஒவ்வொரு நோயாளர்களுக்கும் முதல் தடவை இலவசமாக வழங்கப்படும்.

அட்டை தொலையும்பட்சத்தில் ஆதாரங்களை சமர்பித்து அதற்குரிய பெறுதியையும்  செலுத்தி வைத்தியசாலை நிர்வாகப் பகுதியில் புதிய அட்டையைப் பெற்றுக்கொள் முடியும்” என்றார்.




SHARE

Author: verified_user

0 Comments: