16 Jan 2020

மட்டக்களப்பில் இரண்டாம் கட்ட வீடமைப்பு ரணவிரு சேவா யுத்த வீரர்களுக்கு 32 வீடுகள்.

SHARE
மட்டக்களப்பில் இரண்டாம் கட்ட வீடமைப்பு ரணவிரு சேவா யுத்த வீரர்களுக்கு 32 வீடுகள்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினரதும் பொலிஸாரினதும் குடும்பங்களுக்கு விரிசு மித்துரு வீடமைப்புக் கருத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பில் 32 வீடுகள் சிபார்சு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா நிகழ்ச்சித் திட்ட அதிகாரி பிரான்சிஸ் மேரி விமல்டா பீரீஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை 16.01.2020 இடம்பெற்ற ரணவிரு சேவா குடும்பங்களின் கூட்டத்தில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள குடும்பங்களுக்குவிரிசு மித்துரு வீடமைப்புக் கருத்திட்ட பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டன.

அத்துடன் 200 நல்லின மாங்கன்றுகளும் மாவட்ட செயலாளர் மாணிக்கம் உதயகுமாரினால் வழங்கி வைக்கப்பட்டன.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் மரணித்த, காணாமல்போன, அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த படையினர் மற்றும் பொலிஸாரில் தங்கி வாழும் சுமார் 136 குடும்பங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது வரை இனங்காணப்பட்டுள்ளார்கள்.

இவர்களுக்கான சேமநலன்களை “ரணவிரு சேவா” கவனித்து வருகின்றது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா நிகழ்ச்சித் திட்ட அதிகாரி பிரான்சிஸ் மேரி விமல்டா பீரீஸ்,  மட்டக்களப்பு மாவட்ட ரணவிரு சேவா குடும்ப அமைப்பின் தலைவர் எஸ்.ஏ.சி. அப்துல் வஹாப் உட்பட அதன் அங்கததவர்களும் கலந்து கொண்டனர்.




SHARE

Author: verified_user

0 Comments: